இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களிலும், மத்திய அரசின் கொள்கைகளுடன் ஒத்துப்போகாத மாநிலக் கட்சிகளையும், மத்திய அரசு அந்தந்த மாநில கவர்னர்கள் மூலம் இடைஞ்சல் ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதை உறுதிபடுத்தும் விதமாகவே மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருக்கும் கவர்னர்களின் செயல் அமைந்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மிக்கும், மத்திய அரசுக்குமிடையே அரசு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக வெடித்த மோதல்போக்கு நாளுக்கு நாள் நீடித்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அரசு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திய சுமார் 400 ஊழியர்களை லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா பணிநீக்கம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், லெப்டினன்ட் கவர்னர் தரப்பிலிருந்து, ``பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) பரிந்துரைத்த SC/ST/OBC பிரிவினர்களுக்கான கட்டாய இட ஒதுக்கீட்டுக் கொள்கை பணி நியமனத்தின்போது பின்பற்றப்படவில்லை. மேலும், தேவைப்படும் பணியிடங்களுக்காக அரசின் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் தகுதி அளவுகோல்களைக்கூட பல ஊழியர்கள் பூர்த்திசெய்யவில்லை.
மேலும், பணிக்காக ஊழியர்கள் சமர்ப்பித்த பணி அனுபவச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளும் சரிபார்க்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி அரசின் அதிகாரத்தை முற்றிலுமாக அழிக்கும் முயற்சி இது. லெஃப்டினன்ட் கவர்னர் இந்த முடிவை எடுத்தபோது எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. இவர்களைப் பணிநீக்கம் செய்தது தொடர்பாக ஒரு நோட்டீஸ் கூட வெளியிடப்படவில்லை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான கவர்னரின் இந்த முடிவு நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/vf2tEAK
0 Comments