ஜூ.வி செய்தி எதிரொலி; பெண்கள் விடுதிகளுக்கு ’தனி நிறுவனம்’ உருவாக்கியது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் உரிமைத்துறை புதிதாக பெண்கள் விடுதிகளுக்கான தனி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ’தோழி - முன்னேறும் மகளிரின் முகவரி' எனக் குறிப்பிட்டு, வலைதளம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறது.

கடந்த 15-ம் தேதி ஜூனியர் விகடன் இதழில், `உரிமம் இல்லாத மகளிர் விடுதிகள், ஆந்திர பாணியில் அதிரடியில் இறங்குமா அரசு?' என்னும் தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், விடுதிகளில் தங்கி வேலை பார்க்கும் பெண்களுக்கு `பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' (Tamilnadu Working Women’s Hostel Corporation Limited) என்னும் புதிய நிறுவனத்தை தமிழ்நாடு சமூக நலத்துறை உருவாக்கியிருக்கிறது. இதற்கு பிரத்யேக வலைதளத்தையும் www.tnwwhcl.in உருவாக்கியிருக்கிறது.

அத்துடன் அது தொடர்பாக தகவலைப் பெறுவதற்கு தொலைப்பேசி எண்ணையும் அறிவித்திருக்கிறது.

ஜூனியர் விகடன் - பெண்கள் விடுதிகள்

இந்த அரசு விடுதியில் பாதுகாப்பு வசதி, பயோமெட்ரிக் முறை, குடிநீர், பார்க்கிங் வசதி, படிக்கும் அறை, இலவச வைஃபை என பல வசதிகள் இருக்கின்றன. இந்த விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்த விவரங்களைக் கேட்டு பெற, 9499 9880 09 என்று தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த விடுதிகள் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மேலும் உள்ள கோரிக்கைகள்…

``இந்த அரசு விடுதிகளில் உணவு சேவையும் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். அதேபோல், பெருநகரங்களுக்கு அதிகமான பெண்கள் பணிநிமித்தமாக வருகை தருவதால், அங்கு பல தனியார் விடுதிகள் இயங்கி வருகின்றன. அங்கு சுகாதாரப் பிரச்னை, அதிகக் கட்டணம், பாதுகாப்பின்மை போன்ற பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

பெண்கள் விடுதிகள்

எனவே, தனியார் விடுதிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் பல ஆண்டுகளாக வைக்கப்படுகிறது. தற்போது அரசு விடுதிகளுக்காக தொடங்கப்பட்டதுபோல், இதில் உரிமம் பெற்ற தனியார் விடுதிகளை இணைத்து ஒரே தளமாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

அனைத்து விடுதிகளையும் அரசு நடத்த முடியாது, இதில் தனியாருடைய பங்கு அவசியம். அது முறையாக இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்" என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.



from India News https://ift.tt/ZJIeaQp

Post a Comment

0 Comments