மணபபர: கலவரததக கடடபபடதத வணடமனல..." - மதலவர பரன சங சலவதனன?

மணிப்பூரில் இரண்டு இனக்குழுகளுக்கு மத்தியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்குச் சென்று நிலைமையை சரிசெய்ய முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்யவிருப்பதாக வதந்தி பரவியது.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் - பிரதமர் மோடி

அதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மணிப்பூர் முதல்வர் இல்லத்துக்கு முன்பு திரண்டு, 'ராஜினாமா செய்ய வேண்டாம்' என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய ராஜினாமா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், `முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை' எனப் பதிவிட்டார்.

இதற்கிடையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில்தான் இருந்தேன். மக்கள் எல்லோரும் என்னை புறக்கணித்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால், எனது வீட்டின் முன்பு பெண்கள் உள்ளிட்ட பெரும் கூட்டம் எனக்கு ஆதரவாக நிற்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தேன். அவர்களை வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தபோது கடவுளுக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் - அமைச்சர் அமித் ஷா

அதன் பிறகே எனது ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டேன். இந்தக் கலவர நெருக்கடியில், சிலர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தார்கள். அவருக்கும் இந்தக் கலவரத்துக்கும் என்ன சம்மந்தம். எனது உருவ பொம்மையை எரித்திருந்தால்கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது எனக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது. மேலும், சில பகுதிகளில் பா.ஜ.க அலுவலகம் குறிவைப்பட்டு தாக்கப்பட்டதும் வேதனையளித்தது.

இந்தக் கலவரத்துக்கு நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா என, எனக்கு நானே பலமுறைக் கேட்டுக்கொண்டேன். என்னால் என்ன முடிந்ததோ அதை இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தியிருக்கிறேன். சட்டவிரோத அகதிகளை வெளியேற்றுகிறேன், கடத்தல்காரர்களை நான் மாநிலத்தைவிட்டு அப்புறப்படுத்துவதால் குக்கி சமூக மக்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

இதற்கு அரசியல்வாதிகளின் நடத்தைதான் காரணம். இதை எனது நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறுவேன். இந்தக் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசியல் தலைவர்கள் தங்கள் நடத்தையை, மக்களை அணுகும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் மக்களை எப்படி மதிக்கிறார்களோ, அப்படிதான் மக்களும் நம்மை மதிக்கிறார்கள். எனவே, மக்களை குறைக்கூறி என்ன பயன்?" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/g1uaXmZ

Post a Comment

0 Comments