மேலும் தீவிரமடையும் பிபர்ஜாய் புயல்!
தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், தீவிரப் புயலாக நேற்று வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அப்போதே எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ``ஜூன் 8 -ம் தேதி(இன்று) அதிகாலை 5:30 மணிக்கு அதி தீவிர புயலான பிபர்ஜாய் கிழக்கு மத்திய அரபிக்கடலில், மையம் கொண்டு, கோவாவிலிருந்து 860 கிமீ மேற்கு-தென்மேற்கில், மும்பையிலிருந்து 910 கிமீ தென்மேற்கே உள்ளது. இது மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
from India News https://ift.tt/J6Mwbfs
0 Comments