மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்... இரு சமூக மக்களும் வெள்ளி என்று விசாரணைக்கு ஆஜராக சம்மன்!
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் சாதிய பாகுபாடு பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமாத நிலையில் இன்று அப்பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145 (1)-ன் கீழ் விழுப்புரம் கோட்டாட்சியர், முதல்நிலை உத்தரவைப் பிறப்பித்து மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலின் வாயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளார்.
மேல்பாதி சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் அமைத்துள்ள போலீஸார், கனரக வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை.
மேல்பாதி கிராமம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,இரு சமூக மக்களும் வெள்ளி என்று விசாரணைக்கு ஆஜராக கோட்டாட்சியர் சம்மன் அனுப்பியுள்ளார்.
from India News https://ift.tt/18hkveR
0 Comments