Odisha Train Accident - வருத்தம் தெரிவித்த பைடன் | சூடானில் Mummy-களுக்கு ஆபத்தா? - உலகச் செய்திகள்

சூடானில் துணை ராணுவப் படையினர், கார்டோமிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். அதனால், அங்கிருக்கும் கலைப்பொருள்களும், பழைமையான மம்மிகளும் சேதமடையலாம் என்று அதிகாரிகள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

செனிகல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் Ousmane Sonko-வுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை விதித்ததையடுத்து, அங்கு கலவரம் வெடித்தது. இதில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடன் உச்சவரம்பு மசோதா ஒன்றில் கையெழுத்திட்டார். இதனால் அமெரிக்காவின் கடன் பெறும் வரையறை உயர்த்தப்பட்டிருக்கிறது.

மூன்றாவது முறையாக துருக்கி நாட்டின் அதிபராக, எர்டோகன் (Recep Tayyip Erdoğan) பதவியேற்றார்.

ரஷ்யா - உக்ரைனுக்கிடையே அமைதியை நிலைநாட்டும் புதிய திட்டம் ஒன்றை இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் சிங்கப்பூரில் நிகழ்ந்த பாதுகாப்பு சந்திப்பில் வெளிப்படுத்தினார். இதை உக்ரைனும், ஐரோப்பிய யூனியனும் எதிர்த்திருக்கின்றன.

ட்விட்டரின் பாதுகாப்புப் பிரிவு தலைவரான எல்லா இர்வின் (Ella Irwin) அந்த நிறுவனத்திலிருந்து விலகியிருக்கிறார்.

எகிப்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன், அங்கிருக்கும் பிரமிடுகளைப் பார்வையிட்டார்.

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த Elena Rybakina உடல்நலக்குறைவால் விலகிக்கொண்டார்.

பின்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடலாசிரியரான Kaija Saariaho தனது 70-வது வயதில் காலமானார்.

ஜோ பைடன்

ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரயில் விபத்து குறித்து வருத்தம் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்திய மக்களுடன் அமெரிக்கர்கள் துணை நிற்பதாக அவர் கூறியிருக்கிறார்.



from India News https://ift.tt/PFa9S0T

Post a Comment

0 Comments