அமசசரல இடநரககடயல மணவரகள - மவடட ஆடசயரன ஸடடடஸ; சலம சரசசயம பனனணயம!

தமிழகத்தில் சமீபகாலமாக சீனியர் அமைச்சர்களுக்கும், கலெக்டர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு தலைதூக்கி வருகிறது. சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்திலும் ஒரு பிரச்னை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து சேலத்திலும் ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் கார்மேகம். இவர் இன்று 25.06.2023 தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தமிழ் தினசரி நாளிதல் ஒன்றில் வெளியான செய்தியை வைத்திருந்தார். அதில், ’6 மாதங்களாகியும் திறக்கப்படாத புது கட்டடம். அமைச்சரால் இடநெருக்கடியில் மாணவர்கள்’ எனும் தலைப்பிலான செய்தியை வைத்திருந்தார். அதில், சேலம், தாரமங்கலம் வேலாயுதசாமி கோயில் பகுதியில் இயங்கிவரும் அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டடம் புதுப்பிப்பதற்காக இடிக்கப்பட்டு பின்னர் அந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 6 மாதங்களாகியும் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் திறக்காமல் இருந்து வருவதாகவும், இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பள்ளி தலைமையாசிரியரை கேட்டபோது அமைச்சர் வந்து திறப்பதற்காக வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பான செய்தி சம்பந்தப்பட்ட தினசரி நாளிதழில் வெளிவர, அதனை மாவட்ட ஆட்சியர் தனது அரசு செல்போன் எண்ணில் உள்ள வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக இரண்டு நிமிடத்திற்கு வைத்திருந்தார். இதனால் சேலம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசியபோது, “எனக்கு ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கமே இல்லை. ஆனால் கை தவறி இது நிகழ்ந்திருக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியை முதல்வர் வருகையின்போதே திறந்துவிட்டோம்” என்று விளக்கமளித்தார்.

மேலும் இதுதொடர்பாக தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட கட்டடம் கட்டி இன்னும் திறக்கப்படாமல் தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர், அமைச்சர் நேரு வருகையின்போது கட்டடத்தை திறக்க திட்டமிட்டிருந்தார். மேலும் முதல்வர் சம்பந்தப்பட்ட கட்டடத்தை திறந்து வைக்கவில்லை” என்றார்.

சேலம் ஆட்சியர் அலுவலகம்

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கபீரிடம் பேசியபோது, “இதுகுறித்து எனக்கு சரியான தகவல் தெரியவில்லை. வேண்டுமானாலும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு சொல்கிறேன்” என்றார்.

அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்குமிடையே பள்ளிக்குழந்தைகளின் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான் நடவடிக்கை எடுக்கணும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.



from India News https://ift.tt/WHbFYQr

Post a Comment

0 Comments