சல வரய உயரதத தமக அரச தடடம?' - பதபபகள படடயலடட எதரககம எதரககடசகள!

தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் வரை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டோல்கேட்

கடந்த பத்து ஆண்டுகளாக சாலை வரி உயர்த்தப்படாத நிலையில், ஏற்கெனவே மத்திய அரசும் மாநில அரசும் டோல்கேட் வைத்து வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது சாலை வரி உயர்த்தப்படவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.1 லட்சம் வரை இருந்தால் 10 சதவீதமும், அதற்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், கார்களின் விலை ரூ.5 லட்சம் வரை இருந்தால் 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருந்தால் 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருந்தால் 15 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20 சதவீதம் வரையும் வரி விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க:

``தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளில் பல வரி வருவாய்களைஉயர்த்தி, மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சாலை வரியை தற்போது 5 சதவீதம் வரை உயர்த்தமுடிவெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்களிடம் இருக்கும் கடைசி ரூபாயையும் பிடுங்கும்நோக்கத்தில் இந்த தி.மு.க அரசுசெயல்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. சாலை வரியை உயர்த்தி வாகனங்களின் விலையை மேலும் உயர்த்த தி.மு.க அரசு வழிவகை செய்கிறது. சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவை கலைக்கும் விதமாக சாலை வரியை உயர்த்தமுடிவெடுத்திருக்கும் தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர்:

``சாலை வரியை உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வாகனங்களுக்கான சாலை வரி உயர்த்தப்படாத நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த வரி விதிப்பு இரு சக்கர வாகனத்தின் விலையை 7,000 ரூபாய் வரையிலும், கார்களின் விலையை 25,000 ரூபாய் வரையிலும் உயர்த்தும். சாலை வரி என்பது சதவீத அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், வாகனங்களின் விலை உயர்ந்தாலே சாலை வரியும் உயரும் என்ற நிலையில், அதனுடைய சதவீதத்தை ஏற்றி மேலும் வாகனத்தின் விலையை உயர்த்துவது என்பது கொடுமையிலும் கொடுமை!" என வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஓ. பன்னீர்செல்வம்

வி.கே. சசிகலா, முன்னாள் அ.தி.மு.க பொதுச்செயலாளர்:

``தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறைகளான வணிக வரி, பதிவுத் துறை, டாஸ்மாக் போன்றவற்றிற்கு அடுத்தபடியாக போக்குவரத்து துறையும் கணிசமான பங்கை வகிக்கிறது. தமிழகம் முழுவதும் விற்பனையாகும் வாகனங்களில் குறிப்பிட்ட சதவீதம் சாலை வரியாக மாநில அரசு வசூலிக்கிறது. இந்த வரியுடன் சேர்த்து தான் ஒரு வாகனத்தின் ஆன்-ரோடு விலை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் சாலை வரியாக ரூ.5,873 கோடி வருமானமாக தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.

சசிகலா

எனவே, இதுபோன்று சாலை வரியை உயர்த்துவதால் கார், பைக், ஆட்டோ போன்ற அனைத்து விதமான வாகனங்களின் விலைகளும் கிடு கிடுவென உயரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரமும் மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும். தி.மு.க தலைமையிலான அரசு, தமிழக மக்களின் தலையில் தொடர்ந்து இதுபோன்ற சுமைகளை இறக்கி கொண்டே இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது!" என்றிருக்கிறார் சசிகலா.

அன்புமணி ராமதாஸ், தலைவர், பா.ம.க:

``சாலைவரி உயர்வால் இரு சக்கர ஊர்திகளின் விலை ரூ.16 ஆயிரம் வரையிலும், மகிழுந்துகளின் விலை லட்சக்கணக்கிலும் உயரும். சராசரியாக 5% அளவுக்கு விலை உயர்வு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சாலை வரிகள் மூலமான தமிழக அரசின் ஆண்டு வருவாய் இப்போதுள்ள ரூ.6674 கோடியிலிருந்து ரூ.1000 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். இரு சக்கர ஊர்திகள் தவிர மீதமுள்ள அனைத்து ஊர்திகளுக்கும் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரி ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக்கூடாது.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மகிழுந்துகளை பணக்காரர்கள் தான் பயன்படுத்துகின்றனர் என்ற வாதத்தை முன்வைத்து இந்தக் கட்டண உயர்வை தமிழக அரசு நியாயப்படுத்தக் கூடாது. வசதியான பொதுப்போக்குவரத்து உறுதி செய்யப்படாத சூழலில் சாதாரண மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் மகிழுந்துகளை பயன்படுத்தத் தொடங்கி விட்ட நிலையில், இந்த வாதம் எடுபடாது. சாலைவரிகளை எந்தக் காலத்திலும் உயர்த்த வேண்டிய தேவை இல்லை. சாலை வரி விழுக்காடு அளவில் தான் வசூலிக்கப்படுகிறது என்பதால், மகிழுந்துகளின் விலை உயரும் போதும், எண்ணிக்கை அதிகரிக்கும் போதும் அரசின் வருமானம் தானாகவே உயரும். எடுத்துக்காட்டாக, 2011-12ஆம் ஆண்டில் ரூ.3210.39 கோடியாக இருந்த ஊர்தி வரி வருவாய், 2022-23ஆம் ஆண்டில் ரூ.6674 கோடியாக, அதாவது 108 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஊர்தி வரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10% அதிகரித்து வரும் நிலையில், அதை உயர்த்த வேண்டிய தேவை இல்லை. எனவே, ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்!" என கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன், தலைவர், த.மா.கா:

``சாலை வரியை உயர்த்ததிட்டமிட்டிருப்பது ஏற்புடையதல்ல. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். போக்குவரத்து துறையின் சாலை வரியில் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இது போக வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்துகின்றனர். இப்படி சாலை வரி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றால் ஏற்கெனவே வாகனம் வைத்திருப்பவர்களுக்கு சுமை இருக்கும்போது சாலை வரி உயர்வு நியாயமில்லை. எனவே, தமிழக அரசுசாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/jlvyFAK

Post a Comment

0 Comments