Tamil News Live Today: தமிழ்நாட்டில் சென்னை, தேனி, திண்டுக்கல் என 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. சோதனை!

என்.ஐ.ஏ

தமிழ்நாட்டில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனைக்கான முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும், ஏற்கனவே என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பி.எஃப்.ஐ முன்னாள் நிர்வாகி ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்ந்த பகுதியாக வலுவடைந்தது! - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்ந்த பகுதியாக வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.



from India News https://ift.tt/A1fZ3nE

Post a Comment

0 Comments