உக்ரைனின் பாக்முட்டைக் கைப்பற்றிய ரஷ்யா | வட இத்தாலியில் வெள்ளப்பெருக்கு - உலகச் செய்திகள்

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இது வரலாற்றில் புதிய தொடக்கமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

வட இத்தாலியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சுமார் 36,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

இரானில் மனித கடத்தல் மற்றும் பாலியல் தொழில் செய்யும் குழுவின் தலைவரான அலெக்ஸ் என்பவருக்கு அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மாஸா அமினி கொலைக்கான போராட்டங்களைத் தொடங்கியதாக மூவர் கொல்லப்பட்டனர்.

தைவான் அதிபர் சாய் -இங் வென் `சீனாவுடன் அமைதியை நிலைநாட்டுவோம்' என்று உறுதியளித்திருக்கிறார். `போர் இதற்குத் தீர்வு கிடையாது' என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவின் தனியார் ராணுவமான வாக்னர், உக்ரைனின் கிழக்கு நகரமான 'பாக்முட்' முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறியிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் தரப்பிலிருந்து, கலவரம் மேலும் வலுப்பெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பு, கோவிட் 19 போன்ற பிற தொற்றுகளின் அபாயத்தைக் கண்டறிய ஒரு புதிய தளத்தை உருவாக்கியிருக்கிறது. தொற்று பற்றிய புதிய தகவல்களை ஆராய இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் ஏரிகளின் நீர் உட்கொள்ளும் அளவு குறைந்திருப்பதாக 'ஸைன்ஸ்' ஜர்னல் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரைன் பூத் தனது 89-வது வயதில் காலமானார். இவர் ஆஸ்திரேலியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

'Killers of the Flower Moon' திரைப்படத்துக்கு, 76-வது கான் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிரிட்டிஷ் நாவல் எழுத்தாளர் மார்டின் அமிஸ், தனது 73-வது வயதில் காலமானார். Money, The Information போன்றவை இவருடைய சிறந்த படைப்புகள்.



from India News https://ift.tt/caguOn1

Post a Comment

0 Comments