``கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பின்னால், காங்கிரஸ் வார் ரூமின் பணிகள் பெரிதாகப் பேசப்படுகிறதே?”
“அடிமட்ட அளவில் நுணுக்கமாக திட்டமிடல், மேலாண்மையில் கவனம் செலுத்தினோம். பா.ஜ.க-வின் திசைத்திருப்பல் முயற்சிகளை தவிடுபொடியாக்கும் வகையில் எங்கள் பணிகளை அமைத்துக்கொண்டோம். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது”
“கர்நாடகாவில் 35 வருடமாக ஒரே கட்சி தொடர்ந்து 2 முறை ஆட்சிக்கு வரவில்லை, இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது, இது எங்களுக்கு பெரிய தோல்வி இல்லை என பா.ஜ.க வைக்கும் வாதத்தில் நியாயம் இருக்கிறதா?”
“அவர்கள் வேறென்ன சொல்ல முடியும்? அப்படித்தான் சொல்வார்கள். 1982-க்கு பிறகு இம்முறை 136 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது மட்டும் எப்படி நடந்தது?”
“ஆனால் பா.ஜ.க-வின் வாக்கு விகிதம் பெரிதாக குறையவில்லையே?”
“வாக்கு சதவிகிதத்தை வைத்து சரியவில்லை என்று கூற முடியாது? வாக்கு விகிதம் சரியவில்லை என்றால் ஏன் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை?”
“திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றப்பட்டுவிட்டது என்ற வாதம் சரிதானா?”
“இன்றைக்கு அகன்றுவிட்டார்கள். ஆனால் திரும்ப வர மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமென்றால் தொடர்ச்சியாக வேலை பார்க்க வேண்டும்.”
“ஆனால் காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் மீண்டும் மீண்டும் இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறார்களே?”
“ஆமாம், தென் மாநிலங்களில் அவர்கள் இப்போது ஆட்சியில் இல்லை என்பது உண்மைதானே?”
“ஆட்சியில்தான் இல்லை, கர்நாடகாவில் இப்போதும் வலுவான எதிர்க்கட்சி, தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும், தெலங்கானாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்களே?”
“ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத்தான் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் சொல்கிறார்கள். அவர்களின் இருப்பு இல்லை என்று யாரும் சொல்லவே இல்லை. பள்ளிகளில் அம்பேத்கர் பாடத்தை நீக்கிவிட்டு, சாவர்க்கர் பாடத்தை சேர்க்கிறார்கள். புல் புல் பறவையில் சாவர்க்கர் பறந்துவந்தார் என பாடப்புத்தக்கத்தில் சேர்த்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆட்சியில் இல்லாதது பெரிய விஷயம்தான். அதைவைத்து அப்படிச் சொல்வதில் தவறில்லை.”
“சரி, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பா.ஜ.க ஏற்கெனவே தொடங்கிவிட்டது. காங்கிரஸ் எப்போது தொடங்கப்போகிறது?”
“பா.ஜ.க ஒன்று செய்தால் பத்தாக காட்டுவார்கள். அதனால் அவர்களின் வேலை வெளியே தெரியும். எங்களுடைய பணிகள் அப்படியல்ல. எங்களுடைய பணிகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.”
“ஆட்சி மாற்றம் நிகழ வேண்டுமானால் வட இந்திய மாநிலங்களின் வெற்றி மிக முக்கியம் அல்லவா? காங்கிரஸ் அங்கு வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறதா?”
“வெற்றி பெறவே முடியாது என்று நீங்கள் எப்படிக் கருத முடியும்? ஒரு எல்லைக்கு மேல் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. வட இந்திய மக்கள் அந்த எல்லையை ஏற்கெனவே தொட்டுவிட்டார்கள். எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்.”
“அப்படியானால் அடுத்தகட்ட ‘பாரத் ஜோடோ’வில் வட இந்திய மாநிலங்கள் இலக்காக இருக்குமா?”
“அதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் அதிக ஏழை மக்கள் இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கிறார்கள். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டதும், அதிக உயிரிழப்புகளை சந்தித்ததும் அவர்கள்தான். அவர்களிடம் பிரச்சாரம் செய்வது மிக முக்கியம்.”
“கர்நாடக காங்கிரஸில் இருப்பது போல ஒரு வலுவான தலைமை தமிழ்நாட்டில் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் சொல்லியிருப்பதை எப்படிப் பார்க்குறீங்க?”
“மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும், மக்களுக்கான அரசியலைப் பேச வேண்டும், மக்களுக்கான கேள்விகளை எழுப்ப வேண்டும். மற்றதெல்லாம் தானாகவே நடக்கும்.”
“மக்கள் மனதில் இல்லாமல்தான் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் தமிழக சட்டமன்றத்தில் இருக்கிறதா?”
“நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் தமிழகத்தில் ஒருகாலத்தில் 40% ஆக இருந்த காங்கிரஸின் வாக்கு விகிதம் 10%-க்கு கீழ் குறைந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு தேர்தல் அரசியலைத் தாண்டி ஒரு தத்துவப் போர் நடந்துகொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் காங்கிரஸ்தான் அதில் முன்னே நிற்கிறது. தமிழ்நாட்டிலும் முன்னே நிற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.”
“தி.மு.க கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடர்ந்து கொண்டிருந்தால் எப்படி முன்னே வர முடியும்? தமிழ்நாட்டில் அவர்கள்தான் பெரிய கட்சி, எனவே அவர்கள்தானே முதன்மையாக நிற்பார்கள்?”
“அந்த முதன்மையைப் பற்றிச் சொல்லவில்லை. ஒரு பிரச்னை நடக்கிறது என்றால் மக்களுக்காக யார் முதலில் போய் நிற்கிறார்கள் என்பதுதான் கேள்வி. ஒரு அரசியல் கட்சியின் வேலை அதுதானே? அதைத்தான் சொன்னேன்.”
from India News https://ift.tt/gnV4OID
0 Comments