பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் போஷன் சரண் சிங்கை கைதுசெய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிவரும் குரல்கள் ஒருபக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் இன்னொருபக்கம், டெல்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றி கைதுசெய்தது டெல்லி போலீஸ்.
மேலும் முன்னாள் இ.பி.எஸ் அதிகாரி என்.சி அஸ்தான், ``தேவைப்பட்டால் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவோம். பிரிவு 129-ன் படி சுடும் உரிமை காவல்துறைக்கு உண்டு" என ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகைய சூழலில், ஒலிம்பிக் பதக்கங்கள் உட்பட தாங்கள் வென்ற பிற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கூட்டாக நேற்று அறிக்கை வெளியிட்டு, அதற்குத் தயாராக கங்கை கரைக்கும் வந்தனர்.
பின்னர் விவசாய சங்கத்தினர் தலையிட்டு சமாதானப்படுத்தியதையடுத்து, அவர்கள் பதக்கங்களை ஆற்றில் வீசாமல் திரும்பினர். இவ்வாறு இந்தப் பிரச்னை தொடர்ந்து கவனம் பெற்றவரும் நிலையில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, `மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தைக் கவனித்து வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர் மீதான விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததே இத்தகைய பிரச்னைக்கு முக்கிய காரணம். இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகளுடன் ஆலோசனை நடத்துவோம்' என்று கூறியிருக்கிறது.
இந்த நிலையில், தன் மீதான ஒரு குற்றச்சாட்டை நிரூபித்தால் கூட தூக்கு போட்டுக்கொள்வதாக பிரிஜ் பூஷன் இன்று தெரிவித்திருக்கிறார்.
உத்தரபிரப்தேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய பிரிஜ் பூஷன், ``என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூட நான் தூக்கு போட்டுக்கொள்கிறேன். அவர்களிடம் ஆதாரமிருந்தால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும். அதன்பின்னர் எத்தகைய தண்டனையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயார்" என்று கூறினார்.
from India News https://ift.tt/mZ6WA7z
0 Comments