'லண்டனில் ரூ.143 கோடிக்கு ஏலம் போன திப்புசுல்தானின் வாள்' - மல்லையா ‘தொடர்பு’ எப்படி?!

கடந்த 18-ம் நூற்றாண்டில் மைசூரில் மன்னர் திப்பு சுல்தானின் ஆட்சி நடந்தது. இவர் பல போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். மேலும் பல்வேறு நவீன தொழிநுட்பங்களையும் போரில் புகுத்தினார். இதனால் அவர் மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்டார். குறிப்பாக ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மிக கடுமையாக போராடினார். மேலும் மராட்டியர்களுக்கு எதிராகவும் பல போர்களில் ஈடுபட்டிருக்கிறார்.

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் போருக்கு செல்லும் போது எல்லாம் ஜெர்மன் பிளேடு வகையைச் சேர்ந்த வாளை பயன்படுத்தி வந்தார். சென்ற இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்ததால், இந்த வாளை மிகவும் ராசியான ஒன்றாக வைத்திருந்தார், திப்பு சுல்தான். இதற்கிடையில் கிழக்கிந்திய கம்பெனியின் படையெடுப்பில் கடந்த 1799-ம் ஆண்டு மே 4-ம் தேதி திப்பு சுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினம் வீழ்ந்தது.

அப்போது இந்த படையெடுப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தின் சுவர்களை உடைத்த மேஜர் ஜெனரல் டேவிட் பேர்ட் என்பவருக்கு அவரது வீரத்தை பாராட்டி திப்பு சுல்தானின் வாள் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக நடந்த போரில் டேவிட் பேர்டை சிறை பிடித்த திப்பு சுல்தான் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைத்தார். அப்போது நிலவறையில் வைத்து கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், டேவிட் பேர்ட்.

கிழக்கிந்திய கம்பெனியின் லண்டன் தலைமை அலுவலகம்

பின்னர் வெளியில் வந்த அவர் திப்புவுக்கு எதிராக போரிட்டு வெற்றி கண்டார். எனவே தான் அவருக்கு அந்த வாள் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 204 ஆண்டு பேர்ட் குடும்பத்தில் வாளை வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் அதை கடந்த 2003-ம் ஆண்டு டிக்ஸ் நூனன் வெப் (இப்போது நூனன்ஸ்) என்ற ஏல நிறுவனத்திற்கு விற்பனைக்குக் கொடுத்தனர். அதே ஆண்டு செப்டம்பரில் மதுபான வியாபாரி விஜய் மல்லையா அதனை வாங்கினார்.

இதற்கிடையில் கடந்த மே 23-ம் தேதி இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மற்றொரு ஏல நிறுவனமான போன்ஹாம்ஸ், லண்டனில் ரூ.143 கோடிக்கு (14 மில்லியன் பவுண்டுகள்) சமமான தொகைக்கு 'திப்பு சுல்தானின் வாளை விற்பனை செய்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது இணையதள பக்கத்தில், "இந்த வாள் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது.

இங்கிலாந்து

அவர் கட்டளையிட்ட தாக்குதலில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டதில்' அவரது தைரியம் மற்றும் நடத்தையின் உயர் மதிப்பின் அடையாளமாக ராணுவத்தால் வழங்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தங்களுக்கு எப்படி வாள் கிடைத்தது என்பது குறித்தும், 2003-ம் ஆண்டில் நடந்த ஏலத்தைப் பற்றியும் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே மல்லையா அதை வாங்கிவிட்ட நிலையில் மீண்டும் எப்படி ஏலம் விடப்பட்டிருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு விடை தெரியவில்லை. ஆனால் இரண்டு நிகழ்வுகளிலும் வாள் டேவிட் பேர்டிடம் இருந்து பெறப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு திப்புவின் இரண்டு வாள்களை பேர்டுக்கு வழங்கியிருந்தால் மட்டுமே இந்த வாய்ப்பு எழும்.

திப்பு சுல்தான்

இருப்பினும் லண்டனை தளமாக கொண்ட தி ஆர்ட் செய்தித்தாளில், "நூனன்ஸ் மற்றும் போன்ஹாம்ஸ் வாள்கள் ஒன்றே என்று கூறுகிறது. இந்த வாள் 2003 வரை, லண்டனில் உள்ள டிக்ஸ் நூனன் வெப்பில் £150,000க்கு ஏலம் விடப்படும் வரை பேர்டின் குடும்பத்தில் இருந்தது என்று அது கூறுகிறது. கடந்த செவ்வாய்கிழமை போன்ஹாம்ஸ் ஏலத்தில் எடுத்த வாள் மல்லையாவிடம் இருந்த வாள் என்று பொது வரலாற்றாசிரியர் நிதின் ஒலிகாரா உறுதியாக நம்புகிறார்.

இதுகுறித்து அவர், "டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்ட திப்புவின் வாளை மல்லையா வாங்கியதாக அக்கால செய்தித்தாள் அறிக்கைகள் சான்றளித்தன. தற்போது ஏலம் விடப்பட்ட வாளின் அனைத்து அம்சங்களுடன், அதனுடன் பொருந்துகிறது. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் கீழ் மைசூர் பற்றிய ஒலிகாராவின் படைப்புகள் ராயல் ஏசியாடிக் சொசைட்டி இதழால் வெளியிடப்பட்டுள்ளது.

திப்பு சுல்தானின் படைகள்

மல்லையா தனது திப்பு வாளை செப்டம்பர் 19, 2003 இல் வாங்கினாலும், ஏப்ரல் 7, 2004 வரை பெங்களூருவில் அதை அவர் காட்சிப்படுத்தவில்லை. மேலும் அவர் அந்த நேரத்தில் ஜனதா கட்சியின் செயற்குழு தலைவராக இருந்தார். மேலும் கர்நாடக தேர்தலுக்கு குறைந்த காலமே இருந்ததால், அவர் தேர்தலில் அதை பயன்படுத்த நினைத்தார்.

அப்போது அவர், இந்தியாவின் சிறந்த மகனின் திருடப்பட்ட பொக்கிஷத்தை இந்தியாவின் மற்றொரு மகன் திரும்பக் கொண்டு வந்தான்" என்று பேசியிருந்தார். கடந்த 2004-ல் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரையில், "ஷம்ஷிர்-இ மாலிக்' அல்லது 'ராஜாவின் வாள்' என்ற வார்த்தைகள் வாளில் பொறிக்கப்பட்டுள்ளன.

திப்பு

36 அங்குல நீளம் உடையது. வாளில் ஒரு தங்க வளையத்துடன் கூடிய வட்டு வடிவ பொம்மலைக் கொண்டிருந்தது. மேலும் அதன் பிடி சற்று முன்னோக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நூனன்ஸ் தளத்தில் இந்த வாள் பற்றிய விளக்கம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதில் "ஓ! புரவலர், ஓ! விக்டர், ஓ! பாதுகாவலர், ஓ! உதவியாளர் மற்றும் ஓ! ஆதரவாளர்' என்று அதன் முனையில் பொறிக்கப்பட்டுள்ளது.

மே 23 அன்று போன்ஹாம்ஸ் விற்பனை செய்த வாளின் அரேபிய கையெழுத்துப் பிரதியும் இவ்வாறு கூறுகிறது. 'யா நசிரு! யா ஃபத்தாஹு! யா நசிரு! யா முயீனு! யா ஜாஹீர்! யா அல்லாஹ்!' என அதில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், 2003-ம் ஆண்டு ஏலத்தின் போது வெளியிடப்பட்ட நூனன்ஸ் அட்டவணையில் போன்ஹாம்ஸ் விற்ற வாளைப் போன்ற வாளின் படங்கள் இருக்கின்றன.

அரேபிய சின்னம்

2018-ம் ஆண்டில் வெளியான சில இந்திய செய்திகள், "மல்லையா தனக்கு துரதிர்ஷ்டத்தைத் தந்ததால் வாளைக் கொடுத்து விட்டார்" என தெரிவிக்கப்பட்டு இருந்தது. விஜய் மல்லையாவிடம் இருந்தே போன்ஹாம்ஸ் வாளைப் பெற்றிருக்கலாம் என்று கலை வட்டார யூகங்கள் தெரிவிக்கின்றன. போன்ஹாம்ஸ் இதுவரை வாளை வாங்குபவரின் அடையாளம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து விஜய் மல்லையா தரப்பும் எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை.

நூனன்ஸ் பட்டியல் இந்த ஒற்றை-முனை நேரான வாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறது. ஏனெனில் கையெழுத்துப் பட்டைகள் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து வரும் அரிதான வகைகளில் ஒன்றாகும். மேலும் அவை மிக உயர்ந்த தரமான உற்பத்தி விவரங்களை உள்ளடக்கியது. ஹில்ட் கோஃப்ட்காரி பாணியில் எஃகு மூலம் தங்கத்தைப் பதித்து அலங்கரிக்கப்பட்டுள்ளது" என கூறுகிறது.

வாள்

மேலும் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலாவுன்றன. "இந்த வாளை திப்பு போரின் போது பயன்படுத்தவில்லை என்றும், அது ஒரு சடங்கு/அரசு வாள் என்று கூறப்படுகிறது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது அரண்மனையை கிழக்கிந்திய கம்பெனி துருப்புக்கள் சூறையாடினர். அப்போது அது அவரது படுக்கை அறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இது அநேகமாக முகலாயத் தயாரிப்பாக இருக்கலாம். அதன் கத்தி 16 ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் பிளேடுகளின் பாணியில் தயாரிக்கப்பட்டது. அவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டன.

ஜெர்மன்

அது ஷம்ஷிர்-ஐ மாலிக் (ராஜாவின் வாள்) அல்லது ஷம்ஷிர்-ஐ முல்க் (சாம்ராஜ்யத்தின் வாள்) ஆக இருக்கலாம் என்கிறார்கள். 16-ம் நூற்றாண்டின் உயர்தர ஜெர்மன் கத்திகள் ஒரு உருண்டை அடையாளத்துடன் வந்தன. முகலாய வாள் தயாரிப்பாளர்கள் இந்த அடையாளத்தை நகலெடுப்பது மட்டுமல்லாமல், அதில் தங்க முகலாய ஏகாதிபத்திய பாராசோலையும் சேர்த்தனர். இது பேரரசருக்கான மிக உயர்ந்த தரமான கத்தியைக் குறிக்கிறது.

மே 1799-ல் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி திப்புவின் 'பெட்சேம்பர் வாளை' மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கினார். இது நெறிமுறையை மீறியதாக இருந்ததால் (வெல்லஸ்லி பேர்டின் கீழ் பணிபுரிந்தவர்), லெப்டினன்ட் ஜெனரல் ஹாரிஸ் மீண்டும் வாளை பேர்டுக்கு வழங்கினார்.

திப்பு சுல்தானின் போர்வாள்

காலப்போக்கில், ஹாரிஸ் மற்றும் பேர்ட் இருவரையும் விட வெல்லஸ்லி மிகவும் பிரபலமானார். 2003-ம் ஆண்டு வரை இந்த வாள் பேர்ட் குடும்பத்தினரிடம் இருந்தது, அவர்கள் அதை ஏலத்திற்குக் கொடுத்தனர். ஆனால் இன்றும் அவர்களது குடும்பத்தின் சின்னத்தில் மைசூர் புலி இருக்கிறது" என்ற தகவல்களும் இருக்கின்றன.



from India News https://ift.tt/CQl9kyb

Post a Comment

0 Comments