Tamil News Today Live: `திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாறலாம்!' - தமிழக அரசு அறிவிப்பு

`திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாறலாம்!' - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மதுவிலக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்துவதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

`ஜி ஸ்கொயர்' நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!

ஜி-ஸ்கொயர்

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு புகார் எழுந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது



from India News https://ift.tt/a2dHJLx

Post a Comment

0 Comments