கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வருகின்ற 18-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது கூவாகம் சித்திரைத் திருவிழா. மே மாதம் 2-ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், 3-ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
எனவே, இந்த திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் ஜடாவத். அப்போது கோயில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய முயன்ற அவர், தனது ஷூ-வை கழட்டிவிட்டு தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, அவருடைய ஷூ-வை அவரது உதவியாளர் எடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம், உடன் சென்றவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
from India News https://ift.tt/kaSCoyB
0 Comments