சூடானில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போரில் 413 பேர் இறந்திருப்பதாகவும், 3,551 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் சூடான் அரசு தெரிவித்திருக்கிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் (Margaret Harris) ஐ.நா சபையின் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாட்டின் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்குமிடையே நடந்துவரும் மோதல்களின் ஒரு பகுதியே இந்தப் போர்.
ஏப்ரல் 15-ம் தேதி முதல் இதுவரை சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவையின்மீது 11 தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. சூடானிலுள்ள சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தப் போரால் வேலை நிறுத்தப்பட்ட சுகாதார அமைப்புகளின் எண்ணிக்கை 20. மேலும், சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பணிகள் நிறுத்தப்படும் அபாயத்திலுள்ள சுகாதார அமைப்புகளின் எண்ணிக்கை 12.
எனவே, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுபவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே உலகின் மிக அதிகமான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் வாழும் நாடுகளில் ஒன்று சூடான்.
தற்போது சுமார் 50,000 குழந்தைகள் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையே ஏற்பட்டிருக்கிறது. சூடான் அரசின் அறிவிப்பின்படி, இதுவரை 413 பேர் இறந்திருக்கிறார்கள். 3,551 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from India News https://ift.tt/DUMKhma
0 Comments