`அலுவல்ரீதியாக ஆங்கிலம் பேசினால் 1 லட்சம் யூரோ அபராதம்...' - இத்தாலி அரசின் முடிவுக்கு என்ன காரணம்?

இத்தாலியப் பிரதிநிதிகள் சபையில் (லோயர் ஹவுஸ்), அந்த நாட்டின் அமைச்சர் ஃபேபியோ ராம்பெல்லி, பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் `பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி' கட்சியால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அறிமுகப்படுத்தி முன்மொழிந்தார்.

இந்தச் சட்டத்தின்படி, இத்தாலி நாட்டில் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் எந்தவொரு வெளிநாட்டு மொழியையும், குறிப்பாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தினால், ஒரு லட்சம் யூரோ (ரூ.89 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு, இத்தாலிய மொழியை இழிவுபடுத்துவதுபோல இருக்கிறது என்று `பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி' குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் பெயர்கள், குறியீடுகள் உட்பட அனைத்து அதிகாரபூர்வ ஆவணங்களிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம்  தடைசெய்கிறது. எனவே, வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து உள் கட்டுப்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில்  இத்தாலிய மொழிப் பதிப்புகளைக்கொண்டிருக்க வேண்டியது இனி கட்டாயமாகும்.

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி

மேலும் இது தொடர்பாகப் பேசிய அமைச்சர் ஃபேபியோ ராம்பெல்லி, ``ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது நாகரிகமற்ற விஷயமல்ல. மாறாக ஆங்கிலோமேனியா ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது, தாய்மொழியை இழிவுபடுத்துகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மசோதா நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from India News https://ift.tt/ORea5su

Post a Comment

0 Comments