Tamil News today live: `கதிரியக்க சுனாமி’ - உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரியா!

உலக நாடுகளுக்கு அதிர்ச்சிக் கொடுத்த வடகொரியா!

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்த துணை நிற்கின்றன. கடந்த வாரம், தென்கொரியாகவும் அமெரிக்க படைகளும் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியா தற்போது கடலுக்கு அடியில் புதிய அணு ஆயுதத்தை சோதித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வடகொரியா

இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `கடலுக்கு அடியில் செலுத்தப்பட்ட அணு ஆயுதம் சுமார் 150 மீட்டர் ஆழத்தில் வெடித்து சிதறியது. இதன் மூலம் செயற்கையான கதிரியக்க சுனாமியை(radioactive tsunami) ஏற்படுத்தினோம். வடகொரியா அதிபர் மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த சோதனைக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. `வடகொரியாவின் இது போன்ற செயலுக்கு அந்நாடு நிச்சயம் உரிய விலையை கொடுக்க நேரிடும்’ என தென்கொரியா தெரிவித்துள்ளது.



from India News https://ift.tt/CDF5PlG

Post a Comment

0 Comments