முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச்செல்வன், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கடம்பூர் ராஜூ பேசியபோது, “ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் யாரும் பார்த்திராத தேர்தலாக அமைந்திருக்கிறது.
’நானும் ரெளடிதான், நானும் ரெளடிதான்’ என வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தவர்கள் காணமல்போய்விட்டர்கள். அ.தி.மு.க., ஆறு மாதக் குழந்தையாக திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. மூன்று முறை இழந்த சின்னத்தைத் திரும்ப பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க-தான். கடந்த 2011, சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்து ஆட்சியைப் பிடித்த கட்சிதான் அ.தி.மு.க.
திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலாவைப்போல ’ஈரோடு கிழக்கு ஃபார்முலா’ என்று புதிய ஃபார்முலாவைக் கொண்டு வந்திருக்கிறது தி.மு.க. ஈரோடு மாடல் தேர்தலைப்போல இந்தியாவில் வேறு எங்கும் தேர்தல் நடைபெறவில்லை. வாக்காளர்களான எஜமானர்களை, வேலைகாரர்கள் ஆக்கியதே தி.மு.க-தான். வாக்களித்த வாக்காளர்களை இறுமாப்பாகப் பேசியிருக்கிறார் பொன்முடி. ஓர் அமைச்சர் இப்படிப் பேசலாமா... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை.
மாநிலத் தேர்தல் ஆணையத்திடம்தான் கூட்டணி வைத்திருந்தது. இலங்கை ஈழத்தமிழர்களின் வாழ்க்கையைச் சீரழித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். பிரபாகரனின் ஆன்மா மன்னிக்காதோ என்ற காரணத்தினால்தானோ என்னவோ, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வரவில்லை” என்றார்.
from India News https://ift.tt/QxSGRYj
0 Comments