`ஈவிகேஎஸ் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டார்; உடல்நிலையில் முன்னேற்றம்' - மருத்துவமனை நிர்வாகம்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சிகிச்சையில் ஈவிகேஎஸ்

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். பின்னர் கடந்த பிப்.10ம் தேதி சென்னை எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். இதற்கிடையில் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் அவரின் உடல்நிலையை மையமாக வைத்து பல்வேறு தகவல்கள் வெளியானது.

மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எமஎல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15-ம் தேதி இதய பாதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இதய பாதிப்பிலிருந்து குணமடைந்து வருகிறார்" என தெரிவித்திருக்கிறது.



from India News https://ift.tt/7uC18HF

Post a Comment

0 Comments