``பாஜக வலிமைப்பெற்றுவிட்டால், வன்முறைகள் அன்றாடக் காட்சிகளாகிவிடும்" - சொல்கிறார் திருமாவளவன்

``2 திராவிட கட்சிகளுக்கு மாறாக நாம் தமிழர் கட்சி உருவாகிறதா? ஈரோடு இடைத்தேர்தலில் 10,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களே?"

``திராவிட கட்சிகளுக்கான எதிர்ப்பு வாக்கு என்பது இன்றைக்கு உருவானது அல்ல. அதிமுக-வுக்கும் திமுக-வுக்கும் வாக்களிக்காத மக்கள் தொடக்க காலத்தில் இருந்தே இருந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வாக்குகளால் உருவான கட்சிதான் பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியும் சேர்ந்திருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி பெரும்பாலும் டெபாசிட் கூட வாங்குவதில்லை. எதிர்ப்பு வாக்குகள் ஒருகாலத்திலும் வெற்றிக்கு பயன்படவில்லை.”

திருமாவளவன்

``மாற்று அரசியலை உருவாக்கி வருகிறோம் என நாம் தமிழர் கட்சி கூறுகிறதே...”

``மாற்று அரசியல் உருவாகக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இதுவரை உருவாகவில்லை என்பதுதான் யதார்த்தம். அதுபோல இதுவும் உருவாகும் அளவுக்குப் போகாது.”

``நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகள், வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் இருக்கிறதே?”

``அது அவர்களுக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இல்லை.”

``அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள் என்று சீமான் பேசியது சர்ச்சையானது. அதைப்பற்றி உங்கள் கருத்து?”

``சீமான் பேசியதை நான் கேட்கவில்லை. ஆனால் தூய்மைவாதம் என்பதே ஒருவகையில் சனாதனம்தான். சாதித்தூய்மையை காப்பாற்றத்தான் ஆணவக்கொலை நடக்கிறது. எனவே சாதித் தூய்மைவாதம் தவறு என்றால் இனத் தூய்மைவாதமும் தவறுதான். இனவாதம் பகைமையைத்தான் விதைக்கும்.”

``பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மீது திருமாவளவனுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?

``எந்தவொரு தனிப்பட்ட கட்சி மீதோ, நபர் மீதோ எனக்கு வெறுப்பு கிடையாது. நான் ஒரு தூய்மையான அம்பேத்கரியவாதி, பெரியாரியவாதி. சித்தாந்தம் ஒன்றுதான் எனக்கு எதிரி. இல கணேசன், தமிழிசை செளந்திரராஜன் ஆகியோரோடு நட்பு பாராட்டியுள்ளேன். பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவத்திற்கு பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் ஆபத்தாக இருக்கின்றன. நாட்டின் பெயரை இந்துராஷ்டிரா என மாற்ற நினைக்கிறார்கள். நீட் முதற்கொண்டு மாநில உரிமைகளைப் பறிக்கிற எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற முழக்கத்தை வைக்கிறார்கள். அவர்களோடு எப்படி என்னால் உறவாட முடியும்?”

``நீங்கள் அம்பேத்கரை தலைவராக ஏற்றிருப்பதைப் போல, பா.ஜ.க-வும் அம்பேத்கரை ஏற்றுக்கொள்கிறதே?”

``சனாதனத்தையும், சங் பரிவார்களையும் அம்பேத்கர் தனது இறுதிமூச்சு வரை மூர்க்கமாக எதிர்த்தார். ஆனால் அவர்களே இப்போது, அம்பேத்கர் இந்துத்துவ தலைவர் என்கிறார்கள். இது அவர்களுக்கு அம்பேத்கரின் மீதுள்ள கரிசனம் அல்ல. அம்பேத்கரின் அரசியலை நாசப்படுத்துகிற முயற்சி. திரிபுவாத செயல். ”

பா.ஜ.க அண்ணாமலை

``2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ.க வந்தால்தான் என்ன தவறு?”

``திமுகவுக்கு மாற்றாக அதிமுக இருக்கிறவரை சமூகநீதி அரசியலை பேச இடம் இருக்கும். ஆனால் அந்த இடத்திற்கு பாஜக வருவது மிக மோசமான அரசியலுக்கு இட்டுச்செல்லும். அவர்கள் வர முயற்சிக்கும்போதே திருவள்ளுவர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவிச்சாயம் பூசுகிறார்கள். அம்பேத்கருக்கு பட்டை அடித்து சோசியல் மீடியாவில் பரப்புகிறார்கள். மேடைபோட்டு தனி நபர்களை கேவலமாக பேசுகிறார்கள். பதட்டத்தை தூண்டுவதற்காக இதைச் செய்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வலிமைப்பெற்றுவிட்டால் வன்முறைகள் அன்றாடக் காட்சிகளாகிவிடும். எனவேதான் பா.ஜ.க வரக்கூடாது என்கிறோம்.”

``பா.ஜ.க-வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்கிறீர்கள், ஆனால் 2001-ல் பா.ஜ.க அங்கம் வகித்த கூட்டணியில் வி.சி.க-வும் இருந்ததே?”

``நான் தேர்தல் அரசியலுக்கு புதிதாக வந்த காலம் அது. பா.ஜ.க இருக்கும் கூட்டணியில் எப்படி இருப்பது என நான் தயங்கினேன். ஆனால் “அவர்கள் (பா.ஜ.க) எங்களோடு கூட்டணியில் இருக்கிறார்கள். நீங்களும் எங்களோடு இருங்கள், பா.ஜ.க-வோடு ஒன்றும் நீங்கள் தொகுதிப்பங்கீடு பேசப்போவதில்லையே” என கலைஞர் கருணாநிதி கூறினார். பா.ஜ.க-வுக்கும் எங்களுக்கும் இடையில் எந்த விதமான உறவும் அந்தத் தேர்தலில் உருவாகவில்லை. அவர்கள் தொகுதிக்கு நாங்கள் செல்லவில்லை, எங்கள் தொகுதிக்கு அவர்கள் வரவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகவே இருந்தோம், இருக்கிறோம். ”

``பழங்குடி மக்களும், கிறிஸ்தவர்களும் எங்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள் என வடகிழக்கு மாநில தேர்தல்களுக்கு பிறகு பா.ஜ.க கூறுகிறதே?”

``வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றும் அளவில் மிகச்சிறியவை. அதைவைத்து அப்படி கூறிவிட முடியாது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான் என பல மாநிலங்களில் பா.ஜ.க-வை மக்கள் வெற்றி பெறச் செய்யவில்லையே? இந்தியா முழுக்க பல மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு எதிர்ப்புத்தான் அதிகமாக இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையாக நடத்தினால், முடிவை மக்கள் சொல்வார்கள்.”

மோடி

``பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற பழ.நெடுமாறன் அறிக்கைக்கு பின்னணி என்னவாகும் இருக்கும்?”

``பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் அவர்கள்மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதாவது நன்மை கிடைக்கட்டும் என்று பழ.நெடுமாறன் நினைக்கலாம். ஈழத்தமிழர் நலன்களுக்காக பா.ஜ.க சில முயற்சிகளை எடுக்கிறது என்ற தோற்றத்தை முன்வைக்க ஏற்கெனவே பா.ஜ.க முயற்சிக்கிறது. அதன்மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க எதிர்ப்பை மட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கருதலாம். அதனால்தான் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அடிக்கடி இலங்கை செல்கிறார்கள். ஆனால் அது எந்த வகையிலும் பயன் தராது.”

``வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் விசிகவின் நிலைப்பாடு என்ன?”

``பிழைப்புத்தேடி வரும் தொழிலாளர் சமூகத்தை பகைவர்களாக சித்தரிப்பது தவறு. அவர்களிடம் தினமும் 12 மணி நேரம் வேலை வாங்கி, முதலாளிகள் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். நல்ல இருப்பிடம், கழிவறை கூட தருவதில்லை. வடமாநில கூலித்தொழிலாளர்கள் பக்கம் நிற்பதே அறம்.”



from India News https://ift.tt/3RQ2dUA

Post a Comment

0 Comments