கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கரூர் மாவட்டத்துக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைதந்தார். கரூருக்கு வந்த அவரை, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வரவேற்றார்.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு அளித்த நிகழ்வை விமர்சனம் செய்த சவுக்கு சங்கர், ``அதிகாரிகள், அதிகாரிகளைப் போல நடந்து கொள்ளுங்கள். கொத்தடிமைகளைப் போல நடந்து கொள்ளாதீர்கள். உங்கள் பதவிக்கு இது அழகல்ல. கால்ல விழுந்த போட்டோவை போடுங்க. அடுத்து நல்ல பதவி வேண்டாமா?" என்று கரூர் ஆட்சியரை டேக் செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து, சவுக்கு சங்கரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ``மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த அமைச்சர்களை வரவேற்பது என்பது அதிகாரபூர்வ நெறிமுறை.
அரசியல் கட்சி வேறுபாடின்றி அதிகாரத்திலுள்ள அனைவருக்கும் வரவேற்பளிப்பது வழக்கமான ஒன்றுதான்" என்று கூறி, சமீபத்தில் கரூர் மாவட்டத்துக்கு வந்திருந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ்க்கு வரவேற்பு அளித்த புகைப்படத்தையும் இணைத்து, சவுக்கு சங்கருக்கு பதிலளித்திருக்கிறார்.
from India News https://ift.tt/USHOhLF
0 Comments