இடைத்தேர்தல்: போட்டியிலிருந்து ஓ.பி.எஸ் வாபஸ்..? முழு பின்னணி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களை சமர்பிக்க வேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு சென்றுள்ளது.
இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள் கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுகின்ற பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில், பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிலிருந்து வாபஸ் பெறும் முடிவுக்கு வந்ததற்கான
முழு பின்னணி குறித்த விரிவான தகவல்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்க...
பன்னீர் செல்வம் அறிக்கை
மேலும், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், " இரட்டை இலை சின்னத்தில் யார் நிற்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம்" என அறிவித்தார்.
மேலும், ஓ. பன்னீர் செல்வம் தனது அறிக்கையில், " உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க...
கிசுகிசு: மீசை மினிஸ்டருக்கு செம ரிவிட்!
அண்ணன் தலைவரின் மனக்கணக்கு!
" '50 சி' கிடைச்சா இடைத்தேர்தல்ல நிச்சயம் நமக்குத்தான் இரண்டாம் இடம். மற்ற அனைத்துக் கட்சிகளையும் ஓரங்கட்டிவிடலாம்…" என்கிறாராம் அண்ணன் தலைவர். 'அவ்வளவு பசைக்கு எங்கே போவது?' எனத் தம்பிகள் தத்தளிக்கிறார்கள்.
கிசுகிசு பகுதியில் மேலும்...
மீசை மினிஸ்டருக்கு செம ரிவிட்!
அண்ணன் தலைவரைப் புகழ்ந்த ஆளும் சீனியர்கள்!
காக்கி மாஜி மீது அதிகரிக்கும் குற்றச்சாட்டுகள்!
வருத்தத்தில் இருக்கும் மெர்சலான நடிகர்!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
கர்நாடகத்துக்கு அனுப்பப்படும் அண்ணாமலை!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க இணை பொறுப்பாளராக, தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
BBC: தடை செய்த இந்திரா காந்தி! - ஆவணப்படங்களும், அரசியல் அதிர்வுகளும்..!
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து 'பிபிசி-யை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்' என இந்து சேனா என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,1970-ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி அரசால் பிபிசி இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, 2 ஆண்டுகள் முடங்கியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த முழுமையான பின்னணி என்ன..? விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
வருமான வரி மாற்றங்கள்... சம்பளதாரர்கள் செய்ய வேண்டியது என்ன?
பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு ஐந்து முக்கியமான சலுகைகளை அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தற்போது பழைய முறை (Old Regime) புதிய முறை (New Regime) என்று இரண்டு வகைகளில் வருமான வரி கணக்கிடப்படுகிறது. இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில், யார் யாருக்கு எந்தெந்த வரி முறை ஏற்றது?
சார்ட்டட் அக்கவுன்டன்ட் அபிஷேக் முரளி சொல்லும் விளக்கங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
மேலும்,
Income Tax: கணக்கிட எளிய கால்குலேட்டர்!
தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
சினிமா விமர்சனம்: பொம்மை நாயகி
ஆதிக்க வெறியால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியனின் நீதிப்போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதைச் சொல்பவளே இந்த 'பொம்மை நாயகி'!
சமூகத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைத் தைரியமாகப் பேசவந்ததற்காக அறிமுக இயக்குநர் ஷானுக்குப் பாராட்டுகள்! 'மண்டேலா'வுக்குப் பிறகு யோகி பாபுவுக்கு பேர் சொல்ல ஒரு படம். முழுக்கதையின் பாரத்தையும் சுமக்கும் ஆழமான பாத்திரம். படம் முழுவதும் சிரிக்காமல் நடித்து அந்த சாமானியன் பாத்திரத்துக்கு ஓரளவு நியாயம் சேர்த்திருக்கிறார்.
விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...
மேலும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் - தலையில் அடிபட்டதால் மரணம்?
இது குறித்த செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்க...
from India News https://ift.tt/iGevEd0
0 Comments