நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பரமேஸ்வரன் ஐயர், தற்போது உலக வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனராக (Executive Director) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
1981-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய பரமேஸ்வரன், பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையில் அனுபவம் கொண்டவர். இவர் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்து வந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள உலக வங்கி தலைமையகத்தின் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். இவர் 3 ஆண்டுகள் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார்.
தற்போது நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக 1987-ம் ஆண்டு பேட்ச் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பி.வி.ஆர் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அதேபோல 1988 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேஷ் குல்லர் உலக வங்கியில் செப்டம்பர் 2020 -ல் நியமிக்கப்பட்டார். இவர் தனது ஓய்வு பெறும் நாளான 2023 ஆகஸ்ட் 31 வரை பணியைத் தொடர்ந்தார். தற்போது ஹரியானா அரசின் வேண்டுகோளின் பேரில் தன்னுடைய நாட்டிற்குத் திரும்புவதால், அந்த இடத்திற்கு பரமேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/vEkw3Hb
0 Comments