"உலகின் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழும் ஒரே நாடு இந்தியாதான்" - முன்னாள் மத்திய அமைச்சர் நக்வி

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி, `உலகின் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழும் ஒரே நாடு இந்தியாதான்' என்று கூறியிருக்கிறார். சந்த் குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய பௌத் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த சமாஜிக் சம்ரஸ்தா சம்மேளனத்தில், முக்தார் அப்பாஸ் நக்வியும் கலந்துகொண்டார்.

முக்தார் அப்பாஸ் நக்வி

அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய முக்தார் அப்பாஸ் நக்வி, ``உண்மையை அழிக்க முடியாது என்பதை, பிரதமர் மோடியின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை நிரூபித்திருக்கின்றன.

சந்த் ரவிதாஸின் போதனைகள், செய்திகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சாதி, சமூகம், பிராந்தியம், மதம் ஆகியவற்றின் தடைகளை உடைத்து, எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் ஒவ்வொரு ஏழையும் சமமாக வளர்ச்சியின் பலன்களைப் பெறுவதை மோடி அரசு உறுதிசெய்திருக்கிறது. மத மற்றும் சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை ஆகியவை இந்தியாவின் டி.என்.ஏ-வில் இருக்கின்றன.

முக்தார் அப்பாஸ் நக்வி

முழு உலகுக்கும் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவத்தின் முகமாக இந்தியா மாறியிருக்கிறது. உலகின் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழும் ஒரே நாடு இந்தியா. நாட்டில் சமூக நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைச் சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டிருக்கும் தீய சக்திகளைத் தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.



from India News https://ift.tt/r6RyItJ

Post a Comment

0 Comments