நேபாளத்தில் பிரதமர் பிரசந்தாவின் ஆட்சி கவிழ்கிறதா?! காரணம் என்ன? - முழு விவரம்!

நேபாளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியவில்லை. இதனால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.என் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹால் என்கிற பிரசாந்த், முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி-யின் (k P Sharma Oli) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி, மூன்றாவது முறையாக பிரசாந்தா நேபாள பிரதமராக பதவியேற்றார்.

நேபாள் பிரதமர் பிரசாந்தா

இந்த நிலையில், வரும் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் நேபாள அதிபர் தேர்தலில் கே.பி சர்மா ஒலி-யின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுபாஷ் சந்திர நெம்வாங் (Subas Chandra Nemwang) , எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராம் சந்திர பவுடலும் அறிவிக்கப்பட்டனர். தன் கட்சியின் வேட்பாளருக்குதான் கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கும் என கே.பி.சர்மா ஒலி நினைத்திருந்த வேளையில், ஆளும் அரசின் கூட்டணி கட்சிகள் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே, ராம் சந்திர பவுடலுக்கு (Ram Chandra Poudel) வெற்றி உறுதியாகிவிட்டது.

இதனால் அதிருப்தியில் இருந்த கே.பி. சர்மா ஒலி, நேற்று கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் ஆளும் அரசுக்கு வழங்கிவந்த 79 உறுப்பினர்கள் கொண்ட தன் கட்சியின் ஆதரவை திரும்ப பெருவதாக அறிவித்திருக்கிறார். இதன் காரணமாக நேபாளத்தில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிய நேபாளி காங்கிரஸ் மூத்த தலைவர் பிரகாஷ் மான் சிங், "பிரசாந்தா தலைமையிலான அரசு கூட்டணியில் இருந்த கே.பி.சர்மா ஒலி, தன் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும்.

கே.பி.சர்மா ஒலி

இருப்பினும், நேபாளி காங்கிரஸ், பிற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பிரசாந்தா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பின்னரோ பிரசாந்தா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவாரா என்பதும், புதிய அரசியல் சூழ்நிலையில் எப்படி இதை முன் நகர்த்துவது என்பது குறித்தும், பிரதமர் மற்றும் 8 கட்சிகளின் கூட்டணியும் யோசித்து வருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/Ur6LVaN

Post a Comment

0 Comments