மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது வீடுகளில் காலியாக இருக்கும் இடத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிட்டு சமையல் செய்து சாப்பிடவேண்டும் என்பது அனைவருக்கும் கனவாக இருந்தாலும், அது ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. தற்போது பெரும்பாலான காய்கறிகள் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தித்தான் விளைவிக்கப்படுகின்றன.
இயற்கையான முறையில் விவசாயம் செய்வது மிகவும் குறைவாகவே இருக்கிறது. மும்பையில் சச்சின் டெண்டுல்கரும் தனது வீட்டில் காலியாக இருக்கும் இடத்தில் இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். அதிலிருந்து காய்கறிகளை பறித்து தனது வீட்டு சமையலுக்கும் பயன்படுத்துகிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் சச்சின் டெண்டுல்கர் தனது தோட்டத்தில் இருந்து முள்ளங்கியை பிடுங்கி எடுத்து வருகிறார். இது தவிர தோட்டத்தில் சுரைக்காய், கொண்டைக்கடலை, குடைமிளகாய், வெண்டைக்காய் என பலதரப்பட்ட காய்கறிகளை தனது வீட்டுத்தோட்டத்தில் பயிரிட்டுள்ளார். காய்கறிகளை பறித்துக்கொண்டு புறப்படும் போது, இந்த காய்கறிகளை வீட்டிற்கு எடுத்துச்சென்று எனது அம்மா தயாரித்த உணவை சமைக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் சுத்தமானதாக இருப்பதாகவும், அதனை சமைத்து சாப்பிடுவது மிகவும் மகிழ்ச்சியான ஒரு அனுபவம் என்றும், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சச்சின் டெண்டுல்கரைப்போல் நடிகை ஜுஹி சாவ்லா மும்பைக்கு வெளியில் நிலம் வாங்கி சொந்தமாக காய்கறி தோட்டம் அமைத்துள்ளார். அத்தோட்டத்தில் விளையும் காய்கறிகளை தனது கணவரின் ஹோட்டலுக்கு பயன்படுத்துகிறார். அதோடு உள்ளூர் கிராம மக்களுக்கு குறிப்பிட்ட நிலத்தை கொடுத்து விவசாயம் செய்யவும் உதவி செய்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா புனே அருகில் பல ஏக்கரில் பண்ணை வீடு வைத்திருக்கிறார். அந்த நிலத்தில் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/jRb9Qrc
0 Comments