முன்னாள் காதலனிடம் கொடுத்த நாய்க்குட்டியை வாங்க புதுக் காதலனுடன் சென்ற பெண்;அதன்பிறகு நடந்த விபரீதம்

மும்பை அருகில் உள்ள கல்யாண் பகுதியை சேர்ந்தவர் லலித் உஜ்ஜைன்கர். இவர் திவாவை சேர்ந்த கிரண் சோனாவானே என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்திருந்தனர். இதனால் கிரண், கல்யாண் பகுதியை சேர்ந்த ஆதித்யா என்பவருடன் பழகி வந்திருக்கிறார். அதோடு இவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த லலித் அந்தப் பெண்ணிடம், ஆதித்யாவுடன் பழ்குவதை நிறுத்திவிட்டு, மீண்டும் தன்னுடன் நட்பு வைத்துக்கொள்ளும்படி கேட்டார். ஆனால் கிரண் அதற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதோடு இருவரும் காதலித்த போது கிரண், லலித்திடம் ஒரு நாய்க்குட்டியை கொடுத்திருந்தார். அது தனக்கு திரும்ப வேண்டும் என்று கிரண் கேட்டார். அதோடு அதனை வாங்க வீட்டுக்கு வருவதாக லலித்திடம் தெரிவித்திருந்தார்.

ஆதித்யாவின் தாயார்

இதனால் லலித் தன்னுடைய நண்பர்கள் மூன்று பேரை வீட்டுக்கு வரவழைத்திருந்தார். கிரண் தன் புதிய காதலன் ஆதித்யாவுடன் லலித் வீட்டுக்கு வந்தார். லலித் வீட்டில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. புதிய காதலனை கைவிடச்சொல்லி லலித் தகராறு செய்தார். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. லலித்தும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஆதித்யாவை அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஆதித்யாவை குத்திக்கொலை செய்துவிட்டு 4 பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கிரண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்திருக்கின்றனர். கொலையாளில் ஒருவன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான். முக்கிய குற்றவாளி லலித் மத்திய பிரதேசத்துக்கு சென்றுவிட்டான் எனக் கூறப்படுகிறது. அவனை கைது செய்ய இரண்டு தனிப்படை போலீஸார் மத்திய பிரதேசம் விரைந்திருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/5KkdwNz

Post a Comment

0 Comments