மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமான தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 எனும் இரண்டு பயிற்சி விமானமும் மொரேனா அருகே மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது என முதற்கட்ட தகவல் வெளியாகியுளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
A Sukhoi-30 and Mirage 2000 aircraft have crashed near #Morena, Madhya Pradesh. The aircraft had taken off from the #Gwalior air base. #planecrash #MadhyaPradesh pic.twitter.com/slHhM1vIQ6
— Mallika (@mallikakhatun3) January 28, 2023
இந்த விபத்து காலையில் நடந்ததாக மொரீனா ஆட்சியாளர் தெரிவித்திருக்கிறார். மேலும், சுகோய்-30 -ல் இருந்த விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
#WATCH | Rajasthan, Bharatpur | Wreckage of jet seen. Earlier report as confirmed by Bharatpur District Collector Alok Ranjan said charter jet, however, defence sources confirm IAF jets have crashed in the vicinity. Therefore, more details awaited. pic.twitter.com/005oPmUp6Z
— ANI (@ANI) January 28, 2023
அதே போன்று, ராஜஸ்தான், பரத்பூரில் விமானப்படையின் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. இது தொடர்பக பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன், "சார்ட்டர் ஜெட் விமானம், பாரத்பூர் அருகே விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். அடுத்தக்கட்ட விசாரணைக்கு பின்பே மேலதிக தகவல்கள் வெளிவரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/mlgXHzC
0 Comments