பெங்களூர்: காதலை ஏற்கமறுத்ததால் ஆத்திரம்... இளைஞரால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்!

கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரின் மையப்பகுதியிலிருக்கும் பிரசிடென்ஸி கல்லுாரியில், கல்லுாரி மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. கல்லுாரிக்குச் சென்ற போலீஸார், ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவி, அவருடன் ஒரு இளைஞரைமீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தினர். அவர்கள் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த இளம்பெண் இறந்துவிட்டதாகவும், அந்த இளைஞர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கொலை

போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தது, அதே கல்லுாரியில் படிக்கும் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான லயஸ்மிதா என்பதும், அந்த இளைஞர் மாணவியின் ஊரைச்சேர்ந்த முன்னாள் பி.டெக் மாணவனான பவன் கல்யாண் (23) என்பதும் தெரியவந்தது.

காதல் மறுத்தால் கொலை!

இது குறித்து, பெங்களூர் ரூரல் போலீஸ் எஸ்.பி மல்லிகார்ஜூன் பல்தாண்டி நிருபர்களிடம், ‘‘பவன் கல்யாண் மாணவி லயஸ்மிதாவை பல மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். லயஸ்மிதாவிடம் தான் காதலிப்பதாகக் கூறியபோதெல்லாம், அவர் அதை மறுத்து வந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த பவன் கல்யாண் மதியம், 1:00 மணிக்கு கல்லுாரிக்குள் நுழைந்து, அந்த மாணவியின் கழுத்தில் குத்திக் கொலைசெய்துவிட்டு, தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டார். பவன் கல்யாணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பவன் கல்யாண் அந்தக் கல்லுாரியைச் சேர்ந்தவர் அல்ல. எப்படி கல்லுாரிக்குள் நுழைந்தார், கொலைசெய்ததற்கு வேறு காரணங்கள் உள்ளதா என, முழுமையாக விசாரிக்கிறோம்’’ என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/oFnw3mg

Post a Comment

0 Comments