ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று மாலை தீவிரவாதிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அறிக்கை வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ``உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று தாக்குதல் நடந்த அதே ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் டாங்கிரி என்ற கிராமத்தில் ஐ.இ.டி குண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இதில் ஒரு குழந்தை உயிரிழந்திருக்கிறது. ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. இந்தப் பகுதியில் மேலும் இரண்டு ஐ.இ.டி குண்டுகள் பூமியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் காவல்துறை தரப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/sxcgAM7
0 Comments