`அரசியல் பயணத்தில் இருந்து விலகுகிறேன்’ - முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசியலில் இருந்து ஓய்வு

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. 1968ம் ஆண்டு மாண்டியா மாவட்டத்தில் எம்.பியாக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸில் இணைந்தார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில், மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணா

1999-ம் ஆண்டில் கர்நாடக முழுவதிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச்செய்து, முதல்வராக பதிவியேற்று, பின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர், மகாராஷ்டிரா கவர்னர் என, பல பதவிகளை வகித்துள்ளார். ஐ.டி தொழில் வளர்ச்சி, இதர தொழில்த்துறை வளர்ச்சி, அனைத்து அரசு ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் மாற்றியது என, தனது பல திட்டங்கள் மூலம், தொழில்துறை, தொழில்நுட்ப வளர்ச்சியில் பெங்களூரு நகரத்தையும், ஒட்டுமொத்த கர்நாடகத்தை மிளரச்செய்தவரும் இவர் தான்.

கர்நாடக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், ‘கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி குழப்பநிலையில் உள்ளது. இங்கு நல்ல தலைவர்கள் இல்லை,’ எனக்கூறி, 2017ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, பா.ஜ.கவில் ஐக்கியமானார். கர்நாடகத்தில் நடைபெறும் அரசியல் நகர்வுகள், பிரச்னைகள் குறித்து அவ்வப்போது விவாதிப்பது, கருத்து தெரிவிப்பதென ‘பார்ட் டைம்’ அரசியல் வாதியாக இருந்து வந்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணா.

60 ஆண்டுகளாக அரசியலில் கோலோச்சிய எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி நிருபர்களிடம், ‘‘எனக்கு தற்போது, 90 வயதாகிறது. நாம் வயது குறித்து அறிந்து செயல்பட வேண்டும், 90 வயதில், 50 வயது நபர் போல செயல்படக்கூடாது. இதனால், தான் நான் அரசியல் பயணத்தில் இருந்து விலகுகிறேன். இதற்காக நான் முற்றிலுமாக துறவியாகப்போவதில்லை. கட்சியோ, தலைவர்களோ ஆலோசனை கேட்டால் நிச்சயம் வழங்குவேன்,’ எனக்கூறியுள்ளார்.

பெயர் வைப்பதில் பிரச்னை?!

கர்நாடக பா.ஜ.க அரசு, தேசிய நெடுஞ்சாலை 275ல், பத்து வழிச்சாலையான, பெங்களூர் – மைசூர் அதிவிரைவு சாலைக்கு பெயர் வைக்க தீவிரம் காட்டி வருகிறது. நான்கு நாள்களுக்கு முன்பு இந்த ரோடுக்கு, 1902 – 1940 வரையில் மைசூரை ஆட்சி செய்த நான்காம் கிருஷ்ணராஜ உடையார் பெயரைச்சூட்டுமாறு, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எஸ்.எம்.கிருஷ்ணா கடிதம் அனுப்பியிருந்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணா.

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இதே கோரிக்கையை நிதின் கட்கரியிடம் வைத்திருந்தனர். இந்த பெயரை சூட்டுவதற்கு அரசு தயக்கம் காட்டி வரும் நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, ‘கர்நாடக பா.ஜ.க தலைவர்கள் தன்னை மதிப்பதில்லை எனக்கருதி, அரசியலில் இருந்து விலகியுள்ளாரா?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இன்னும், 4 மாதங்களுக்கும் தேர்தல் வரும் நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவின் இந்த அறிவிப்பு,  அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/61u2RMx

Post a Comment

0 Comments