உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சதீஷ் பால். இவருக்கு திருமணமாகி நீது என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்துவேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அண்ணன் சதீஷை காணவில்லை என சதீஷின் சகோதரர் சோட்டலால், காசியாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது. அப்போது, ஒருவாரமாக கணவனை காணாவிட்டாலும், அதைப் பொறுட்படுத்தாமல் இருந்த நீது மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது.
ஆனால், நீதுவை விசாரித்தபோது அவர் எந்த குற்றத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகுதான் நீதுவுக்கும், ஹர்பால் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக காவல்துறை ஹர்பாலை விசாரித்ததில் சதீஷ் பாலை கூட்டாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக காவல்துறை தரப்பு, ``சதீஷ் பாலுக்கும் நீதுவுக்கும் இருந்த கருத்துவேறுபாடு காரணமாக ஹர்பால் நீதுவோடு நெருக்கமாகியிருக்கிறார். கணவனால் அதிக தொல்லை ஏற்படுவதாக கருதிய நீது அவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
அதற்கு ஹர்பாலை உதவிக்கு அழைத்திருக்கிறார். கொலை நடந்த அன்று சதீஷ் வழக்கம் போல வீட்டில் குடித்துவிட்டு மது போதையில் இருந்த போது ஹர்பாலும், நீதுவும் அவரின் கழுத்தை கயிரால் இறுக்கி கொலை செய்துவிட்டனர். அவர்களின் வீட்டுக்கு பின்னால் கட்டப்பட்டு வந்த கழிவறை செப்டிக் டேங்க்-ல் வைத்து கவுரவ் எனும் கட்டட தொழிலாளர் உதவியுடன் புதைத்து மேலேயே செப்டிங் டேங்க் கட்டி கட்டி எழுப்பியிருக்கிறார்கள். குற்றத்தை உறுதிபடுத்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ty1SmN0
0 Comments