காதலனுடன் கடற்கரைக்குச் சென்ற 17 வயது சிறுமி: போலீஸ் எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

மும்பை, அருகிலுள்ள கல்யாண், தாகுர்லி இடையிலான கழிமுகப்பகுதியில் 17 வயது மைனர் பெண் ஒருவரும் அவரின் காதலனும் அமர்ந்து வீடியோ, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அது ஒரு கடற்கடைப் பகுதி என்று கூறப்படுகிறது. அந்த இடத்தில் வேறு ஆட்கள் நடமாட்டம் இல்லாமலிருந்தது. அந்த நேரம் அங்கு வந்த இரண்டு பேர் தங்களை போலீஸார் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் இருவரிடமும் ஏன் இங்கு தனியாக வந்தீர்கள் என்று கேட்டு மிரட்டி அந்தப் பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் விஷ்னுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இரண்டு பேரையும் கைதுசெய்தனர். இது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி, ``குற்றவாளிகளில் ஒருவரான ஆசிஷ் குப்தா(32) மைனர் பெண்ணுடன் இருந்த நபரை மூத்த போலீஸ் அதிகாரியிடம் அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றான்.

பாலியல் வன்கொடுமை

மற்றொரு நபரான பண்டேகர்(25) மைனர் பெண்ணிடம் அவருடன் இந்த காதலனுக்கு வீடியோ கால் செய்து, தான் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டதாகவும், தன்னுடைட பாதுகாப்பை பற்றிக்கவலைப்படவேண்டாம் என்று கூறும்படி கூறினார். அந்த பெண்ணும் அதே போன்று தன்னுடைய காதலனுக்குப் போன் செய்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அந்தப் பெண்ணை பண்டேகர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதோடு நடந்த சம்பவத்தை தன் போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினார். மைனர் பெண்ணுடன் இருந்த வாலிபரை தாக்குர்லி ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு ஆசிஷ் குப்தா மீண்டும் மைனர் பெண் இருந்த இடத்துக்கு வந்தனர்.

அங்கு மைனர் பெண்ணும் பண்டேகரும் இருந்தனர். ஆசிஷ் குப்தா மைனர் பெண்ணிடம் இரக்கப்படுவது போல் பேசினார். பண்டேகர் தவறு செய்துவிட்டான் என்றும், ரயில் நிலையத்தில் விட்டுவிடுவதாக கூறி ஆசிஷ் குப்தா அழைத்து அப்பெண்ணை சென்றார். குப்தா சிறிது தூரம் சென்றதும் அவரும் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்'' என்று தெரிவித்தார். மைனர் பெண் அழுது கொண்டே ரயில் நிலையத்துக்கு வந்த போது அவரை பார்த்த ரயில்வே போலீஸார் அவரை அழைத்து சென்று விசாரித்தனர். அந்தப் பெண் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அப்பெண் விஷ்னு நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

கைது

அங்கு அவரின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர். மைனர் பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவன் தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாத பழைய பிராண்ட் போன் ஒன்றை பயன்படுத்தியதை மைனர் பெண் கவனித்திருந்தார். அது குறித்து போலீஸாரிடம் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர். குற்றவாளிகள் பயன்படுத்திய போன் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதலில் பண்டேகர் அவனது வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டான்.

அவனிடம் விசாரணை நடத்தி அவனுடன் இருந்த ஆசிஷ் கைதுசெய்யப்பட்டான். இருவரும் இதற்கு முன்பும் இதே போல் வேறு பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பார்கள் என்று போலீஸார் கருதுகின்றனர். எனவே அது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தனியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள ஆசிஷ் குப்தா இரண்டு டீக்கடை நடத்தி வருகிறார். குற்றவாளிகள் 30 மணி நேரத்தில் கைதுசெய்யப்பட்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/qEWtAov

Post a Comment

0 Comments