மங்களூர் குண்டு வெடிப்பு: என்ஐஏ புதிதாக வழக்கு பதிவு; ஷாரிக் உடன் மேலும் இருவரின் பெயர்கள் சேர்ப்பு!

கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த, 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாட்டையே அதிரச்செய்தது. குக்கர் குண்டு தயாரித்து எடுத்துச்சென்ற முகமது ஷாரிக் (24) படுகாயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் வீட்டில் சோதனை செய்ததில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும், பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவருடன் தொடர்பில் இருந்ததாக, ஊட்டியில் ஒருவர், கர்நாடக மாநிலம் மைசூரில் இருவர், மங்களூரில் ஒருவர் என, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

குக்கர் குண்டுடன் ஷாரிக்.

கடந்த, 30-ம் தேதி கர்நாடக போலீஸார் இவ்வழக்கை என்.ஐ.ஏ விடம் ஒப்படைத்த நிலையில், நேற்று காலை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஷாரிக் மீது புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். ஷாரிக் சிகிச்சை பெற்று ஓரளவுக்கு குணமடைந்துள்ளதால், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது.

ஏற்கனவே குண்டு தயாரித்து சோதனை!

இது குறித்து கர்நாடக போலீஸாரிடம் பேசினோம், ‘‘முகமது ஷாரிக் முக்கிய குற்றவாளியாக அறிவித்த என்.ஐ.ஏ, புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. அவருடன் சிவமோகா பகுதியை சேர்ந்த, அவரது நண்பர்களான மாஸ் அஹமது (22), சையது யாசின் (22) ஆகியோரையும் முக்கிய குற்றவாளிகளாக சேர்த்துள்ளது. விசாரணை தொடங்கிய நிலையில், இவர்கள் மூவரும் நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

வெடி குண்டுக்கான பொருட்கள்.

இவர்கள் மூவரும் இணைந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருள்களை, உளவுத்துறை சந்தேகமடையாத வகையில், பல மாதங்களாக சிறிது சிறிதாக வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இந்தாண்டு தொடக்கத்தில் சோதனை முயற்சியாக குறைந்த சக்தியுள்ள வெடிகுண்டு தயாரித்து, சையது யாசின் வீட்டுக்கு அருகே வெற்றிடத்தில் வெடிக்கவைத்து சோதனையும் செய்துள்ளனர். நவம்பர் 19ம் தேதி, வெடித்த குக்கர் குண்டை, கூட்டம் நிறைந்த பகுதியில் வெடிக்க வைத்து அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தி திட்டமிட்டருந்தனர். கோவை சம்பவத்துக்கும் இவர்களுக்கமான தொடர்பு குறித்தும் விசாரணை நடக்கிறது,’’ என்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/btz8v5R

Post a Comment

0 Comments