``மும்பை தெருக்களில் நிர்வாணத்தை அனுமதிக்கலாமா?” - நடிகை உர்ஃபி ஜாவேத்தை கைது செய்ய பாஜக கோரிக்கை

டிவி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் மாடல் அழகி உர்ஃபி ஜாவேத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் எப்போது ஆடைகள் அணிவதில் வித்தியாசம் காட்டுபவர். ஜாவேத் அணியும் ஆடைகள் எப்போதும், சர்ச்சைக்குரியதாக இருக்கும். அந்த ஆடைகளுடன் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா ஹோட்டல் ஒன்றுக்கு இரவு நண்பர்களுடன் வந்தார் உர்ஃபி ஜாவேத். அவரை பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். மேலாடை எதுவும் அணியாமல், வெறும் நகைகளை மட்டும் கொண்டு அலங்காரம் செய்திருந்தார்.

உர்ஃபி ஜாவேத்

அவரைக் கண்டதும் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு போட்டோ எடுத்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியோடு போஸ் கொடுத்தார் ஜாவேத். அதோடு, `நான் மேலாடை அணியவில்லை என்பதை பாருங்கள்’ என்று கூறி தனது முதுகுப்பகுதியையும் போட்டோ எடுப்பதற்காக காட்டினார். அவரின் ஆடையை பார்த்த பலர் சோசியல் மீடியாவில் துணிச்சலான செயல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிலர் ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அவரின் ஆடையில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதேசமயம் ஜாவேத்தை கைது செய்யவேண்டும் என்று மாநில பாஜக மகளிரணித் தலைவர் சித்ரா வாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``உர்ஃபி ஜாவேத் மும்பை தெருக்களில் நிர்வாணமாக நடந்து கொண்டுள்ளார். அவரை கைது செய்யவேண்டும்.

மும்பையில் என்ன நடக்கிறது. மும்பை தெருக்களில் நிர்வாணமாக நடக்கும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மும்பை போலீஸிடம் ஏதாவது சட்டப்பிரிவு இருக்கிறதா? அப்படி இருந்தால் விரைந்து கைது செய்யுங்கள். ஒரு புறம் ஜாவேத்தின் வக்கிர செயலால் இளம்பெண்கள் மற்றும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். மற்றொரு புறம் ஜாவேத் வக்கிர செயலை பரப்புகிறார்” என்று சித்ரா வாஹ் குற்றம் சாட்டி இருந்தார்.

சமீபத்தில் ஜாவேத்திற்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதோடு துபாயில் பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்திய போது போலீஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/KEubzmw

Post a Comment

0 Comments