சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி அதீத உயிரிழப்புகள், பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவிய கொரோனா தொற்றால் இதுவரை, 4.46 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 5.30 லட்சம் பேர் மரணித்துள்ளனர். கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே கதிகலங்க வைக்கும் அளவுக்கு, அதன் பாதிப்பு நம்மை நடுநடுங்க வைத்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து கடந்த ஓராண்டாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, சற்று நிம்மதியை உணர்ந்த நிலையில், தற்போது, சீனாவில் மீண்டும் கொரோனோ வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்ததுள்ளதால், அனைத்து நாடுகளும், தொற்று பரவல் தடுப்பு பணியில் களமிறங்கியுள்ளன.
பெங்களூரில் பல கட்டுப்பாடுகள்
மேலும், இந்தியாவில் BF-7 என்ற புதிய வகை பரவல் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தலைமையில், ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பெங்களூரில் உள்ள கெம்பேகெளவுடா சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும், பெங்களூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் மீண்டும் கொரானா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக, கெம்கேகெளவுடா விமான நிலையத்தில், ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டு, கொரோனா பரவலின் அறிகுறிகள் உள்ளோர், எட்டு நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. ‘கர்நாடக மாநிலம் முழுவதிலும் பொது இடங்களிலும், கிருஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்படும்’ என முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று தெரிவித்திருந்தார்.
அரசியல் கட்சியினர் கலக்கம்
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நெருங்க உள்ளதால், அரசியல் கட்சியினர் தற்போதே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் ‘பஞ்சரத்தின ரத’ யாத்திரை, பா.ஜ.க-வினர் ‘ஜன் சங்கல்ப’ யாத்திரை, ஆம் ஆத்மி ‘கிராம் சம்பர்க்’ யாத்திரை என, பல பெயர்களில், தினமும் ஆயிரக்கணக்கானோர் கூட்டமாக சேர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மீண்டும் கொரோனா பரவி, கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்தால், வாக்கு சேகரிக்கும் பணி முடங்குமோ? என அனைத்து அரசியல் கட்சியினரும் கலக்கத்தில் உள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/A3RIUXa
0 Comments