கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருத்தி மூர்க்கட்டில்பாடி கிராமத்தைச்சேர்ந்த தையல் தொழிலாளி பதிச்சேரில் கனில் குமார், விஷ்ணு டெய்லர்ஸ் உரிமையாளரான இவர் தன்னுடைய மனைவி பிரசன்னா உடன் சேர்ந்து தையல் தொழிலை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் கேரளாவின் மூர்க்கட்டில்பட்டி பகுதியில் 7 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விஷ்ணு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கிழிந்த துணிகளை தைத்து கொடுத்து அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவர்கள் நடத்திவரும் தையல் கடையை விரிவுபடுத்த வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்று நினைத்தவர் நேற்று வியாழன் வங்கிக்கு கிளம்பியுள்ளார்.
அப்போது வேலூரை சேர்ந்த லாட்டரி முகவர் ஒருவர் அவரது கடைக்கு வந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்க வேண்டியுள்ளார். விற்பனைக்க வந்த அவரிடம் கானில் குமார் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். பின்னர் வணிக நோக்கத்திற்காக ஒரு வங்கிக்கு கடன் கேட்டு சென்றுள்ளார்.
வங்கியில் கடனுக்காக அவர் காத்திருந்த போது, அவரது கடைக்கு அருகிலுள்ள நண்பர் ஒருவர் அவரை தொலைபேசியில் அழைத்தார், `லாட்டரியில் முதல் பரிசாக ரூ.80 லட்சத்தை அவர் வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் வென்றுள்ளதை' தெரிவித்தார்.
வியாழக்கிழமை எடுக்கப்பட்ட காருண்யா பிளஸ் லாட்டரியின் முதல் பரிசான ரூ.80 லட்சத்தை இந்த தையல் தொழிலாளி வென்றுள்ளதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கனில் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/WSy4pD5
0 Comments