பேருந்து நிறுத்தத்தில் நின்ற கொண்டிருந்த மக்கள் மீது மோதிய லாரி - 6 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் நேற்று சுமார் 20 பேர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சரக்கு லாரி ஒன்று சாலை சந்திப்பில் வேகமாக வந்ததாக தெரிகிறது. எதிர்பாராதவிதமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் மரணமடைந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. விபத்தைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் லாரியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் பதற்றத்துடன் ஓடியதை மக்களில் சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரை தேடும் பணியும் நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூர்யவன்ஷி, "விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 8 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை கைது காவல்துறை தேடிவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/oeMSsTp

Post a Comment

0 Comments