பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தல்... 5 காவல்துறை அதிகாரி உட்பட 17 பேர் கைது!

சமீப காலமாக இந்தியாவில் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாகி வருகிறது. பல்வேறு இடங்களில் போதைப் பொருள் கடத்தல் அதிகமாகி குற்றநடவடிக்கைகள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு காஷ்மீர் பகுதிக்கு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. அதன் விசாரணையில், 17 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில் நான்கு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் என 5 பேர் காவ்லதுறையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் கோழிக்கடை உரிமையாளர்கள், உலர் பழ வியாபாரிகள், சிறிய கடை வியாபாரிகள் என கலவையாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள 2 கிலோ ஹெரோயின் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

போதை பொருள்!

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி, "காஷ்மீருக்கு போதைப் பொருள்களைக் கடத்துவதில், பாகிஸ்தானின் நேரடித் தலையீட்டை அவர்களின் உதவியாளர்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட வழக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாகிர் அலி கான் என்பவர், தனது மகன் தஹ்மீத் கானுக்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அந்தப் பக்கத்தில் போதைப் பொருள்களை சப்ளை செய்பவர் என்று நம்பப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/SayGc98

Post a Comment

0 Comments