Evening Post:கவர்னர் கேட்கும் விளக்கம்-அண்ணாமலைக்கு மறுப்பு ஏன்?-'வாரிசு'சிக்கல்:பர பர பின்னணி

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: விளக்கம் கேட்கும் ஆளுநர்... ஒப்புதல் கிடைக்குமா?

ஆன்லைன் ரம்மி

ன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இம்மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதி இருப்பதால், இம்மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கிடைக்கும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

அதிகரித்த தற்கொலைகள்...

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடும் ஏராளமான பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் அவலம் தமிழகத்தில் தொடர் கதையாக நிகழ்ந்து வந்தது.

இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் பணியில் இருப்போர், ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் எனப் பலதரப்பட்ட நபர்களும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் சிக்கித் தவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

செல்லாமல் போன சட்டம்

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த கடந்த அதிமுக ஆட்சியின் போதே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டி சட்டத்தை ஏற்க இயலாது என்று ரத்து செய்துவிட்டனர்.

ஸ்டாலின்

புதிய சட்ட மசோதா

இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்தது. இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய, மீண்டும் சட்ட வரைவை தயாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இக்குழு, கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26 ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

கிடப்பில் போட்ட ஆளுநர்

இதனையடுத்து இது தொடர்பான சட்ட மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் இம்மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இது குறித்து சர்ச்சை எழுந்தது.

* " ஆன்லைன் சூதாட்டத்தினால் இன்னும் ஓர் உயிர் போனால்தான் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவாரா..?" என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆளுநர் ரவி

அதிகரித்த அழுத்தம்...

இந்த நிலையில், இந்த அவசர சட்டமசோதா வருகிற 27 ம் தேதியுடன் காலாவதியாகிறது என்பதால், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக ஆளுநரை சந்தித்து தமிழக அரசு தரப்பில் வலியுறுத்த இருப்பதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்திருந்தார்.

இதனிடையே , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முன்னாள் அமைச்சர்களுடன் நேற்று சந்தித்து, திமுக அரசுக்கு எதிராக 10 பக்க புகார் கடிதம் ஒன்றை அளித்தார். அதே சமயம், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனால் இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் அதிகரித்தது.

தலைமைச் செயலகம்

விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம்

இந்த நிலையிலேயே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான மசோதா தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி உள்ளதாகவும்,

* ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

* கடந்த காலங்களில் 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவையும் நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டு, பின்னர் அம்மசோதா தொடர்பாக தமிழக அரசுக்கு ஆளுநர் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியது சர்ச்சையானது.

* திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்தே அவர் அந்த மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் அம்மசோதாவுக்கு இன்னும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்காததால், அது நிலுவையிலேயே உள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதால், இந்த மசோதாவுக்கும் நீட் மசோதா கதி ஏற்படுமா அல்லது விரைவில் ஒப்புதல் கிடைக்குமா என்பது அடுத்த சில தினங்களில் ஆளுநர் எடுக்கப்போகும் முடிவில் தெரியவந்துவிடும்.

கழுகார் அப்டேட்ஸ்: 'ராகுலும், அண்ணாமலையும் ஒண்ணா?'  

கழுகார் அப்டேட்ஸ்

ல்வா மாவட்டத்தில், பெண் இன்ஸ்பெக்டர் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர், ஆவடி மாநகரக் காவல் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு காவல் மாவட்டத்துக்கு அதிகாரியாக இடம்மாற்றம் செய்யப்பட்டார். வந்த இடத்தில், தன் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் அதீத நெருக்கம் காட்டுகிறாராம்...

கழுகார் அப்டேட்ஸில் மேலும் இடம்பெற்றுள்ள செங்கோட்டையனுக்கு கொம்பு சீவிய ர.ர.க்கள்! | "ராகுல் மேடை போட்ட இடம்தான் வேணும்..." அண்ணாமலை அடம் | டாஸ்மாக் கடைகள் மூடல்...கரூர் கம்பெனி காரியம் உள்ளிட்ட அரசியல் சீக்ரெட்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

'காங்கிரஸ் - அதிமுக கூட்டணியா..?' - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி!

கே.எஸ்.அழகிரி

மிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்தோம். 'காங்கிரஸ் உட்கட்சி பூசல்கள் பற்றி வேண்டாம்...' என்கிற நிபந்தனையோடு பேச தொடங்கினார்.

நடப்பு அரசியல், திமுக கூட்டணி கட்சிகளுடனான முரண்பாடு, மதச்சார்பின்மை விஷயத்தில் காங்கிரஸின் சறுக்கல், ஆளும் அரசை விமர்சிக்க முடிகிறதா, அதிமுக-வின் மெகா கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது உள்பட பல கேள்விகளுக்கு அவர் அளித்த விரிவான பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

581 கிலோ கஞ்சாவை எலி தின்றதாம்- நீதிமன்றத்தில் காவல்துறை பகீர் தகவல்!

எலி - கஞ்சா

த்தரப்பிரதேச மாநில மதுரா காவல்துறையினர் கடந்த 2018 - 2019-ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் என்டிபிஎஸ் சட்டத்தின் (NDPS Act ) கீழ் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்கரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்தான், நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...

பஞ்சாப் 'ஷாக்': இளைஞரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 4 இளம்பெண்கள்!  

பாலியல் வன்கொடுமை

ஞ்சாப் மாநிலத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர், நான்கு இளம்பெண்களால் கடத்திச்செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

மசாலா பொருள்கள்.. நம்பிக்கையூட்டும் ஆராய்ச்சி!

ஆரோக்கியம் ஒரு பிளேட் - 37

பொதுவாகவே மசாலாப் பொருள்கள் பற்றிப் பலவிதமான கருத்துகள் நம்மிடம் உள்ளன. 'மசாலா அதிகம் சேர்த்தால் அல்சர் வரும்; வயிறு புண்ணாகும்; ஜீரணத்துக்குப் பாதகம் ஏற்படும்... எனவே மசாலாவை முற்றிலும் தவிர்க்கவேண்டும்' என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். மறுபக்கம் 'மசாலாப் பொருள்களில் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன' என்றும் சொல்கிறார்கள்.

இதில் எது உண்மை..?

ஆனந்த விகடனில் டாக்டர் அருண்குமார் எழுதும் 'ஆரோக்கியம் ஒரு பிளேட் ' தொடரில் அதற்கான விடை உள்ளது. அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...

'வாரிசு' பட ரிலீஸ் சிக்கல் தீர்ந்ததா..? பின்னணியில் நடந்த பர பர பேச்சுவார்த்தை!

வாரிசு; விஜய்

ரண்டு பெரும் நடிகர்களான அஜித் - விஜய் படங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் போட்டியும் உருவாகியுள்ளது. 'துணிவு' படம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் வெளியிடும் படம் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களும் அந்த படத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்துக்கு தமிழகத்தில் போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும் சொல்கிறார்கள்.

பல நேரங்களில் நடிகர் விஜய்யின் படம் வெளியாகும்போது பிரச்னையோடுதான் வெளியாகி இருக்கிறது. தற்போது உருவாகி வரும் வாரிசு படத்துக்கு வெளியாகும் முன்பே பிரச்னை உருவாகியுள்ளது.

இது குறித்த விசாரணையில், இதன் பின்னணியில் உள்ள அரசியல் உள்ளிட்ட தெரியவந்தது. அதனை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...



from தேசிய செய்திகள் https://ift.tt/TWyp2B5

Post a Comment

0 Comments