கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அறுபதாக உயர்த்தி கேரள நிதித்துறை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் திரும்பப் பெறப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து கடந்த புதன்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை நிதித்துறை அதற்கான உத்தரவுக்கு அனுமதி அளித்தது. அதையடுத்து திங்கள்கிழமை இது குறித்து அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகள், இளைஞர் அமைப்புகள் என பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் போராட்டங்களும் அறிவித்தன். இதையடுத்து நேற்று (புதன்கிழமை) முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இதற்கிடையே ஆளுங்கட்சியான சி.பி.எம் நிர்வாகிகளிடமும், எல்.டி.எஃப் கூட்டணி கட்சிகளிடமும் ஆலோசிக்காமல் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இது பற்றி சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், ``அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த முடிவு குறித்து எல்.டி.எஃப் கூட்டணியுடனோ, கட்சியுடனோ கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு கட்சியிடம் விவாதித்திருக்க வேண்டும். ஆனால் கட்சியின் கருத்து கேட்கப்படாமல் அமைச்சரவை இதை தீர்மானித்திருக்கிறது. எனவே முதல்வர் தலையிட்டு அந்த உத்தரவை வாபஸ் பெற்றிருக்கிறார். இதில் நிதித்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/sGaYmcZ
0 Comments