உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் அருண் குமார் (24) என்பவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்துக்கு முன்பு நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மணமகனுக்கு பெண் வீட்டார் புது காரை பரிசாக வழங்கியிருக்கின்றனர். மணமகன் அருண் குமார் தனக்கு வரதட்சணையாக கிடைத்தக் காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து, மணமகனிடம் கார் சாவியைக் கொடுத்த பெண் வீட்டினர், மணமகன் கார் ஓட்டுவதைப் பார்க்க அந்தப் பகுதியில் ஆங்காங்கே சுற்றி நின்றிருக்கிறார்கள். அதில் மணப்பெண்ணின் தாயார் சரளா தேவியும் ஒருவர். மணமகன் காரில் ஏறியதும் சுற்றியிருப்பவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்திருக்கின்றனர். அருண் குமார், காரில் உள்ள பிரேக்கை அழுத்ததாமல் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், கார் அங்கிருந்தவர்கள் மீது பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதில் காரின் சக்கரத்தில் சிக்கி சரளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிறுமி உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம், ``அருண் குமாருக்கு கார் ஓட்டத்தெரியாது. அவர் மணமகள் வீட்டினர் கொடுத்த புதிய காரை டெஸ்ட் டிரைவ் செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. அப்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. அருண் குமார் மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்திருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/gA9qVCT
0 Comments