கோட்டை
அமீர் விருது-
தமிழ்
நாட்டில் மத மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களால் குடியரசு தின விழாவின் பொது வழங்கப்படுகிறது . தமிழகத்தில் வசிக்கும் அனைத்து
இந்திய குடிமக்களுக்கும் (ஆயுதப்படை வீரர்கள், காவல்,தீயணைப்புத் துறை மற்றும் அரசுப்
பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல் , அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக
நிகழும் பட்சத்தில் நீங்கலாக ) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர். இவ்விருதானது
ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது
அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது
வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும்
மனவிலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது ரூ.25,000/-. க்கான
காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
2023-ஆம்
ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கோட்டை அமீர் விருத்திற்கென தகுதியானவர்களைத்
தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Application) அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட
மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது என்ற இணைய தளம் மூலமாகவோ மட்டுமே
15.12.2022 -அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்ட வேண்டும். உரிய காலத்திற்குள்
பெறப்படாத விண்ணப்பபங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்,
இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களால் 26.01.2023 கிடியரசு தினத்தன்று விருது வழங்கி கெளரவிக்கப்படுவர்.
0 Comments