``மாணவர்கள் விரும்பும் மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்" - ராகுல் காந்தி

மத்திய உள்துறை அமித் ஷா தலைமையிலான, இந்திய ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிலம்பியது. தென் இந்தியாவில் இந்தப் பரிந்துரை, பிராந்திய மொழிகளை ஒடுக்குவதாக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தனர்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா

காரணம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாய மொழியாக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இந்தி இருக்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தி

நேற்று, கர்நாடக மாநிலம் முழுவதிலிமிருந்து சுமார் 1,800 இளைஞர்களிடம் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, ``எந்தவொரு நபருக்கும், மொழி என்பது உரையாடலுக்கும், என்ன பேசுகிறோம் என்பதற்கு மட்டும் முக்கியமல்ல. மொழி என்பது நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஒரு மொழியானது, கற்பனை வளமும், அதிகளவில் வரலாறுகளையும் கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொரு மாநிலமும் தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தந்த மொழியைப் பயன்படுத்துவதற்கு உரிமை வேண்டும். அதேபோல், மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியில்  அல்லது தாங்கள் பயன்படுத்தும் மொழியில், தேர்வுகளில் விடையெழுத அனுமதிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

அண்மையில் மத்திய அரசின் பணிக்கான தேர்வுகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/mTIqGHC

Post a Comment

0 Comments