`ஷிண்டே ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்” - சிவசேனா போட்டி பொதுக்கூட்டத்தில் உத்தவ் சகோதரர்

மும்பையில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிகள் சார்பாக நேற்று இரவு தனித்தனியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. இப்பொதுக்கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரேயின் மைத்துனி ஸ்மிதா தாக்கரே, சகோதரர் மகன் நிஹர் தாக்கரே, உத்தவ் தாக்கரே சகோதரர் ஜெய்தேவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜெய்தேவ், ``ஷிண்டே ராஜ்ஜியத்தை திரும்ப கொண்டு வாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார். ``நான் தாக்கரே குலத்தை சேர்ந்தவன் என்பதற்காக எந்த அணிக்கு செல்வதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ஷிண்டேயை நான் அதிகமாக விரும்புகிறேன். ஏனென்றால் துடிப்பான செயல்பாடுகளால் தான் ஷிண்டே இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

கடந்த 5 நாள்களாக நான் ஷிண்டே அணியில் சேரப்போகிறேனா என்று கேட்டு தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. இந்த தாக்கரே யாருடனும் இணைந்திருப்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஷிண்டேயின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. மகாராஷ்டிராவிற்கு இது போன்ற ஒரு துடிப்புள்ள நபர் தேவை. ஷிண்டே மீதான பற்று மற்றும் அன்பு காரணமாகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். மகாராஷ்டிராவிற்கும், சிவசேனாவிற்கும் பாரம்பரியமும், வரலாறும் உண்டு. ஷிண்டேயை தனித்து விட்டுவிடாதீர்கள் என்பது எனது வேண்டுகோள். ஏழைகளாக இருந்தாலும் சரி விவசாயிகளாக இருந்தாலும் சரி அவர்களுக்காக ஷிண்டே ஒரு விவசாயியை போல் கடினமாக வேலை செய்வது வருகிறார். எனவே அனைத்தையும் புறந்தள்ளி விட்டு ஷிண்டே ராஜ்ஜியத்தை கொண்டு வாருங்கள். முழுவதுமாக தேர்தல் நடத்துங்கள். முழு ஆதரவுடன் மீண்டும் ஷிண்ட ஆட்சிக்கு வரட்டும்” என்று தெரிவித்தார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே உயிரோடு இருந்த காலத்தில் இருந்தே ஜெய்தேவ் தாக்கரேயை தங்களது குடும்பத்தில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார். கட்சியில் ஏற்பட்டு இருந்த அதிகார போட்டி காரணமாக சிவசேனாவில் ஜெய்தேவ் தாக்கரேயை ஆரம்பத்திலேயே உத்தவ் தாக்கரே ஓரங்கட்டிவிட்டார். இதனால் பெரிய அளவில் சிவசேனாவில் உத்தவ் மற்றும் ஜெய்தேவ் இடையே அதிகாரப்போட்டி ஏற்படவில்லை. தற்போது உத்தவ் தாக்கரே மீது இருந்த வெறுப்பை ஷிண்டே மூலம் ஜெய்தேவ் வெளிப்படையாக காட்டி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..



from தேசிய செய்திகள் https://ift.tt/jHmLgwJ

Post a Comment

0 Comments