ஆற்றங்கரையோரத்தில் நின்று கட்டிப்பிடித்தபடி செல்ஃபி; தவறி விழுந்த சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம்!

மும்பையில் ஆற்றங்கரையோரம் நின்று மொபைலில் செல்ஃபி எடுத்த இரு சகோதரிகள் தவறி விழுந்து இறந்தனர். மும்பை அருகில் உள்ள வைதர்ணா ஆற்றுக்கு சகோதரிகள் நீலா(24), சந்து(15) உட்பட 4 பேர் மாலை நேரத்தில் பிக்னிக் சென்றனர். அவர்கள் ஆற்றங்கரையோரம் நின்று கொண்டு அதன் அழகை கண்டு ரசித்தனர். அதோடு கரையோரம் நின்று அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தனர்.

அவர்கள் விழுந்த இடத்தில் அதிகப்படியான சகதி இருந்தது. இதனால் அவர்களால் வெளியில் வர முடியவில்லை. பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து இரண்டு பெண்களை மீட்டனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் இரண்டு பேரை தேடினர். அருகில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். முதலில் சகதியில் சிக்கி உயிரிழந்திருந்த சந்துவின் உடல் மீட்கப்பட்டது. நீலாவை காணவில்லை. பல மணி நேரம் படகு மூலம் தேடினர். அதன் பிறகே நீலாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆற்றில் விழுந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். இரண்டு பேரின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கரையோரப்பகுதியில் அதிக அளவில் சகதி இருப்பதால் அங்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தும் மக்கள் அங்கு செல்வதாக போலீஸார் தெரிவித்தனர். இறந்துபோன சகோதரிகளின் தந்தை வடாபாவ் கடை நடத்தி வருகிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/Jieqz2s

Post a Comment

0 Comments