மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவழை வெளுத்து வாங்கிய நிலையில், எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலாக 15 நாட்கள் பெய்தது.
மும்பையில் பருவழை கடந்த ஜூன் 11-ம் தேதி துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பருவமழை தொடங்கியதில் இருந்தே மும்பை, புனே உட்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்கள் வெள்ளம் நிறைந்தது. மழை நிற்க வேண்டிய காலங்களிலும், தொடர்ந்து மழை பெய்து வந்தது. மும்பையில் நடப்பு ஆண்டுக்கான பருவமழை விடை பெறுவதற்கான தேதி அக்டோபர் 8 என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்தது. அதன்பிறகும் ஆங்காங்கு மழைப்பொழிவு இருந்தது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்த இந்த தேதியில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் மும்பை நகரில் பருமவழை பெய்து விடைபெற்றது. இதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி பருவழை விடைபெற்றது. 2020ல் அக்டோபர் 28-ம் தேதி விடைபெற்றது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு மும்பையில் பதிவான மழை அளவில், இந்த ஆண்டு அக்டோபரில் பதிவான மழையளவுதான் அதிகபட்சமாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் அதிக மழையளவு பதிவாகியிருந்தபோதும், இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட வறட்சியான நிலையே நிலவியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகிறார். அதற்கு காரணம் சாதகமான வானிலை நிலவாததும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நகரை விட அரபிக்கடலில் மழைப்பொழிவு அதிகம் இருந்தது தான் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் வரை பெய்யும். கடந்த ஆண்டில் அக்டோபர் 25 -ம் தேதி பருவமழை ஆரம்பமானது. அதனால் அதிக அளவி்ல் தமிழகத்துக்கு மழை கிடைத்தது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்திலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
இந்த ஆண்டு அக்டோபர் 21, அல்லது 22ம் தேதிகளில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பருவமழை பெய்யவில்லை. தாமதமாகும் என தெரிகிறது. இந்நிலையில், இந்த மாதம் இறுதிக்குள் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்று தற்போது உள்ள வானிலை நிகழ்வுகளின் அடிப்படையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை 88 சதவிகிதம் 112 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக 115 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மூன்று நாள் மழை பெய்யும்...
அத்துடன் இன்றைய தினம் மிதமான மழை இருக்கும் என தெரிவித்துள்ளது. அதன்படி, தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29-ம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/qvikXoC
0 Comments