மும்பை: நள்ளிரவில் இடிந்து விழுந்த 4 மாடிக்கட்டடம்; ஒருவர் பலி! - தொடரும் மீட்புப்பணிகள்

மும்பையையொட்டி இருக்கும் நவிமும்பை கோபர் கைர்னேயில் உள்ள பொன்கொடே என்ற கிராமத்தில் 25 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்தக் கட்டடத்தில் 40 பேர் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு 10:30 மணிக்கு இந்தக் கட்டடம் லேசாக ஆட ஆரம்பித்தது. உடனே கட்டடத்தில் வசித்தவர்களில் 32 பேர் விரைந்து செயல்பட்டு வெளியில் வந்துவிட்டனர். மேலும் 8 பேர் கட்டடத்திலிருந்து வெளியில் வந்தபோது கட்டடம் இடிந்து விழுந்தது. அவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

இடிந்து விழுந்த கட்டடம்

இன்று காலையிலும் இடிபாடுகளை அகற்றியபோது உள்ளே ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி புருஷோத்தம் ஜாதவ் கூறுகையில், ``கட்டடம் இடிந்த போது 8 பேர் அதில் சிக்கிக்கொண்டனர். மீட்புப்பணிகள் காலை வரை நடந்தன. இதில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லியில் வெடிகுண்டு வைத்து இரட்டை கட்டடங்கள் இடிக்கப்பட்டது போன்று புனேயில் உள்ள 30 ஆண்டுகள் பழைமையான மேம்பாலம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. புனே சாந்தனி சோக் பகுதியில் இருந்த இந்தப் பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. ஆனால் இதில் பாலம் முற்றிலுமாக இடியவில்லை. இதையடுத்து ஜேசிபி மெஷின் மூலம் மேம்பாலம் இடிக்கப்பட்டது. மேம்பாலத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்டு காலை 8 மணிக்கு மேம்பாலம் இருந்த சாலை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.



from தேசிய செய்திகள் https://ift.tt/jJ7IOal

Post a Comment

0 Comments