கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலஞ்சேரியில் செப்டம்பர் 6-ம் தேதி ஏதர் 450-X என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். மேலும், அவரிடம் லைசன்ஸ் உட்பட அனைத்து ஆவணங்களையும் கேட்டு சோதித்திருக்கின்றனர். எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தபோதும், ``எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் இல்லை!" எனக் கூறி ரூ.250 அபராதம் விதித்திருக்கின்றனர். போலீஸார் அவசியமே இல்லாமல் விதித்த அபராதத்தை, அந்த வாகன ஓட்டியும் வேறு வழியில்லாமல் கட்டிவிட்டு ரசீதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
பின்னர் அந்த நபர் ரசீதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தப் புகைப்படம் இணையத்தில் நெட்டிசன்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சம்பந்தமில்லாமல் அபராதம் விதிக்கும் போக்கு முதன்முறையல்ல. கடந்த ஜூலை மாதம், கேரளாவில் போதிய எரிபொருள் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு முன்பு... குஜராத்தில் காரில் வந்த ஒரு பயணி ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து அந்தப் பயணி காவல்துறையைக் கண்டிக்கும் விதமாக ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் கார் ஓட்டுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நடக்கின்றன. இதை கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/OyfFemo
0 Comments